செய்தி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்களின் அலட்சியப் போக்கு! சேவை கண்ணியத்துடன் தொடரும் என நேரடி விசாரணைக்குப் பின் மண்டல அதிகாரி தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[24 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2857
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பல ஆண்டுகளாக பலரும் அனுபவித்து வந்த மன உலைச்சல்களுக்கு தீர்வு கண்டிருப்பது திருப்திதான்.
தூத்துக்குடி மண்டல அலுவலர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் உண்மை நிலையை நன்கு அறிந்திருப்பார். மக்களின் பொறுமையையும் , சகிப்புதன்மையையும் புரிந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.
நமக்கு வேண்டியதெல்லாம் முறையான சேவையும் , நல்ல அணுகுமுறையும்தான் இந்த இரண்டும் நன்றாக இருந்தால் வேறு எந்த குறையும் கண்ணுக்குத் தெரியாது.
எனவே இனிமேல், எல்லாம் நல்லவிதமாக நடக்கும் என்று எதிபார்ப்போமாக.
-----------------------------------------------------
வாடிக்கையாளர்களே! மண்டல அலுவலர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க
எவருக்கேனும் இனி, இதுபோன்று ஏதேனும் குறைகள் இருந்தால் வங்கி மேலாளரிடம் கூறுங்கள்.
அதற்கு வாய்ப்பில்லாவிட்டால் அல்லது அவர்மீதே குறையிருந்தால் மண்டல அலுவலரின் கைபேசி எண்ணுக்கு ( +91 94432 39130 )தொடர்புகொண்டு தெரிவியுங்கள் நியாயமான குறைகளை உடனுக்குடன் சரிசெய்து தருவார்.
------------------------------------------
குறைகள் மேலிடத்துக்கு தெரிய வந்ததினால்தான் கூடுதலான ஒரு பெண் அலுவலரும் நியமிக்கப்பட இருக்கிறார். மேலும் விரைவான சேவைக்காக இன்னுமொரு பிரிண்டரும் வர இருக்கிறது. இதன்மூலம் அலுவலர்களுக்கும் சுமை குறைவதோடு துரித சேவையும் ஆற்ற முடிகிறது.
இதைத்தான் " கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் " என்பார்களோ?.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross