Re:... posted bymohamed younus (muscat)[15 July 2013] IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 28671
எனது இளைமை கால நினைவுகள். இப்போது கொள்கை வேறுபட்டாலும் சில நினைவுகளை அசைபோட வேண்டி உள்ளது.
இப்போது உள்ள புதிய கட்டுமானம் இல்லாத பழைய பள்ளி. வெளிவராண்டாவில் தொழுகை நடக்கும். பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தில் வெளிச்சத்திற்கு ஒரு டியுப் கட்டப்பட்டு இருக்கும். நான் இரவு எட்டுமணிக்கே சென்று அந்த வெளிவராண்டாவில் படுத்து ஒரு சிறு குட்டி தூக்கம் போட்டு விடுவேன். அவ்வளவு இதமான காற்று வரும்.
வித்ரியாவில் தற்போது துபாயில் இருக்கும் குடாக் சித்தீக் காக்கா, பஹ்ரைனில் இருக்கும் வி.பி காக்கா. சீனாவில் இருக்கும் ருக்நூர்தீன் சாஹிப், துபாயில் இருக்கும் லெப்பை சாஹிப், லியாவுல் ஹக் போன்றவர்கள் என்னோடு போட்டி போட்டு ஓதுபவர்கள்...வித்ரியாவும் வெளி வராடாவில் தான் நடக்கும்.
பரிமாறப்படும் சுக்கு காபி ஒரு புது உற்சாகத்தை கொடுக்கும்.
அப்போது பெரிய சதுக்கைதான் இறுதி. அதற்கு பின் வீடுகள் கிடையாதாம். மின்சாரமும் இல்லாத காலம்.
தொழுகைக்கு வருபவர்கள் வீடு செல்ல பயப்படுவார்களாம்.
இதற்காகவே பைத்து சொல்லி மன்னண்ணை விளக்கோடு மோதினார் ஒவ்வொரு வீடாக சென்று எல்லோரையும் விட்டு விட்டு இறுதியில் அவர் பள்ளி செல்வாராம்..இந்த பழக்கம் இன்னும் வரை தொடர்கிறது..
முன்பு சதுக்கை தெரு வழியாக மட்டுமே இந்த பைத்து செல்லும் ..ஜமாத்தார்கள் யாராவது மரணித்து விட்டால் அன்று பைத்து கிடையாது...பைத்து இல்லை என்றால் பெண்கள் தரப்பில்ருந்து புகார் வந்துவிடும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross