செய்தி: பொது மக்கள் கொடுக்கும் புகார் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்தால் போலீசாருக்கு 1 ஆண்டு ஜெயில்: மத்திய அரசு புதிய உத்தரவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விரைவில் இறைவனின் உண்மையான தீர்ப்பும் அதன் தண்டனையும் அநியாயகாரர்களுக்கு கிடைப்பது உறுதி... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[18 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28738
உத்தரவுகள் பல வரலாம் ஆனால் அது நடைமுறைக்கு செயல்படுவது கிடையாது என்பதே வேதனையான விசியம்...
பண பலம் உள்ள எவனும் தனக்கு பிடிக்காதவனை இன்னருவன் மூலம் பொய் கேஸ் போட வைத்து பழிவாங்குவது சகஜமாகி வருகிறது...
அதே நேரத்தில் உண்மைலேயே ஒருவன் பாதிக்கப்பட்டு நியாயம் வேண்டி காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க சென்றால் அவனுக்கு முறையாக FIR போட்டு ரசீது கொடுப்பது கிடையாது... இது நமது நகரில் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் சம்பவமாக உள்ளது..
பொது மக்கள் கொடுக்கும் புகார் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்தால் போலீசாருக்கு 1 ஆண்டு ஜெயில்: மத்திய அரசு புதிய உத்தரவு! இது செயல் படாது... !
ஆகையால் பண பலத்தாலும் இன்னும் பல அரசியல் பலத்தாலும் காவல்துறை மூலம் அலைகழித்து பாதிக்கப்பட்ட மனிதன் வேறு வழியின்றி வல்ல இறைவனிடம் முறையிட்டு ஆதிக்க வர்க்கத்திற்கு அழிவை கொடு என்று துவா செய்கின்றான்...பின்னர் சபிச்சு சாபமும் விடுகிறான்... இதுவே தற்போது நமது நகரில் நடந்து வருகிறது...
நகரில் சில பேர் இந்த மாதிரியான பண ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி தினமும் காவல் நிலையம் - கோர்ட் என்று அலைந்து வருவது குறிப்பிடத்தக்கது... விரைவில் இறைவனின் உண்மையான தீர்ப்பும் அதன் தண்டனையும் அநியாயகாரர்களுக்கு கிடைப்பது உறுதி...
இந்த மாதிரி கருத்து பதிபவன் எவனோ அவனும் கண்காணிக்க படுகிறான் பண பலம் படைத்த ஆதிக்க வர்க்கத்தின் அடியாட்கள் மூலமாக என்பது குறிப்பிடதக்கது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross