எங்கள் அன்புத் தந்தை - மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் நான்காவது வழித்தோன்றல் - பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் T.M.K.சுல்தான் அப்துல் காதிர் அவர்கள், கடந்த 11.07.2013 அன்று இரவு 11.15 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா மறுநாள் 12.07.2013 அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூம் அவர்களின் மறைவை முன்னிட்டு, இரங்கல் தெரிவித்தும், துஆ இறைஞ்சியும் - நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், இணையதள செய்திகள் வாயிலாகவும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அனைத்து சகோதர - சகோதரிகளுக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஊறு விளைவித்திருந்தால், பெருமனது கொண்டு அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, +91 98415 67213 (T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ) என்ற கைபேசி எண்ணுக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மனமார்ந்த துஆக்களுடன்,
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ
(மர்ஹூம் அவர்களின் மக்கள்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross