செய்தி: ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 4-ஆம் ஆண்டு துவக்க விழா, 2-ஆம் அமர்விற்கான நிர்வாகிகள் தெரிவு, 7-வது பொதுக்குழு மற்றும் குடும்ப ஒன்றுகூடல் விழா குறித்த மன்ற அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒன்றுமே புரியவில்லை! posted byHameed Rifai (Yanbu)[18 July 2013] IP: 199.*.*.* United States | Comment Reference Number: 28745
சமாதானக் குழுவின் செயல்பாடுகள் குறித்து நிறைய கேள்விகள் உள்ளன. சமாதானக் குழுவின் அறிக்கையின்படி, நமதூரில் பிரச்சினையாகக் கருதப்பட்டவை நான்கு. அதில் ஒன்று தனிநபர் ஆதிக்கம்.
வேடிக்கை என்னவெனில், முதல் மூன்று பிரச்சினைகளுக்கு சமாதானக் குழுவின் அறிக்கையில் விரிவாகவும், விலாவாரியாகவும் தீர்வு சொல்லப்பட்ட நிலையில், “தனிநபர் ஆதிக்கம்” என்ற நான்காவது அம்சம் மட்டும் கண்டுகொள்ளப்படவே இல்லை.
நிலைமை இவ்வாறிருக்க, இவ்வளவு பெரிய ஊர் விவகார விஷயத்தில், ஊரில் உள்ள நடப்புகளை முழுமையாக அறியாமலும், போதிய விவரங்கள் இல்லாமலும், யாரையோ திருப்தி படுத்தும் நோக்கிலுமே தீர்மானங்கள் உள்ளதாகக் கருதுகிறேன்.
தனிநபராக யாரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கலாம். அது அவரவர் உரிமை. ஆனால், ஒரு மன்றத்தின் பெயரில் எந்த ஒரு சாராரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த நினைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதை பணிவுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஒரு காயல் நல மன்றத்தின் செய்தி இது என்பதால், என் மனதில் தோன்றும் பல கேள்விகளையும் எனக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறேன். ஒருவேளை அவற்றை நான் வெளிப்படுத்தினாலும், கத்திரி காத்துக்கொண்டிருக்கும்.
மற்றபடி, இம்மன்றத்தின் நகர்நலன் தொடர்பான இதர தீர்மானங்கள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்தி, துஆ செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross