Re:...வக்ப் போர்டு குறைகள் posted bymackie noohuthambi (kayalpatnam)[18 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28749
நான் அண்மையில் நமதூர் ஜூம்மா பள்ளிக்கு சென்றேன். அங்கு வாளியில் வசூல் செய்தார்கள். இலங்கையில் அப்படி வசூலாகும் பணம் எவ்வளவு என்று நோட்டீஸ் போர்டில் போடுவார்கள். இங்கு அப்படி செய்யவில்லையே ஏன் என்று கேட்டேன். வக்ப் போர்டு 7% தங்களுக்கு அந்த வசூலில் இருந்து தரவேண்டும் என்று கேட்கிறார்கள். என்ன நியாயம் இது என்றார். வக்ப் போர்ட் இந்த பள்ளியின் செலவுகளுக்கு ஏதாவது செய்கிறார்களா என்று கேட்டேன். இல்லை, மராமத்து செலவுக்கு கூட தருவதில்லை அதை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.
வக்ப் போர்டின் உண்மை நிலைப்பாடு இப்படி என்றால், இந்த அநீதிகளை தட்டிக் கேட்க, பள்ளிவாசல்களுக்கு அதன் நியாமான தேவைகளுக்கு உதவ தமிழ் மகன் உசேன் அவர்கள் முன்வரவேண்டும். வக்ப் நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டனை அளிக்கவேண்டும். அதே நேரம் பள்ளி வாசல்களுக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும். அந்த வருமானத்தில் குளிர் காய வக்ப் போர்ட் நினைத்தால், இப்படி ஒரு வக்ப் போர்ட் முஸ்லிம்களுக்கு தேவையா என்று முஸ்லிம் சமுதாயம் எண்ண நினைத்துவிடும்.
வெறும் அரிசியும் ஈதபழமும் நோன்பு காலங்களில் வழங்குவது மட்டும் வக்ப் போர்டின் வேலையாக இருக்க கூடாது. பள்ளிவாசல் சீரமைப்புக்கும் துணை நிற்கவேண்டும். இதை செய்ய தமிழ் மகன் உசேன் தவறினால், அவர் வெறும் அரசின் அதிகாரியாக சம்பளத்துக்கு வேலை செய்யும் ஒரு சாதாரண மனிதனாகவே முஸ்லிம்களால் பார்க்கப்படுவார், இந்த சமுதாயத்தின் காவலனாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் எனபதை நினைத்தால் வாழ்கையில் தோல்வி இல்லை என்று பாடுகிறார் உங்கள் அரசியல் ஆசான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross