செய்தி: சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை 2013: 10ஆம், 12ஆம் வகுப்புகளில், நகரளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு! விரிவான விபரங்கள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பார்க்கவும் படிக்கவும் பரவசமூட்டுகிறது posted bymackie noohuthambi (kayalpatnam)[19 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28766
கொட்டிக்கிடக்குது சவுதியிலே என்று சொல்வார்கள். இன்று நமதூரில் பணமழை பெய்வதும் அப்படிக் கொட்டிக் கிடக்கும் பணக்குவியலை வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அள்ளி செல்வத்தையும் பார்க்க படிக்க பரவசமாக இருக்கிறது. இணையதள ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
இந்த நிகழ்சிகளை பார்க்க முடியாமல் இருந்தவர்களுக்கு கண் முன்னே கொண்டு நிறுத்தியுள்ள படங்களும் செய்திகளும் ஒரு முக்கிய விஷயத்தை நமக்கு உணர்த்துகிறது. கல்வியாளர்களை உற்சாகப்படுத்த அனுசரனையாளர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். நானும் மாணவனாக இருந்திருக்க வேண்டாமா என்ற ஆசை எழுகிறது.
ஒரு காலத்திலே படிப்பதற்கு வாய்ப்பில்லாமல் வசதி இல்லாமல் படிப்பை பாதியிலே நிறுத்திய என் போன்றவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு கை கொடுத்து உதவ வேண்டிய கட்டாயம் எல்லா காயல்நல மன்றங்களுக்கும் உண்டு. இப்போது இதுபோன்ற மன்றங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசும் கூட களத்தில் அப்படிப்பட்டவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். ஆனால்,சாமானியர்கள் அவர்களை எப்படி அணுகுவது என்ற guidance வழிகாட்டு முறைகள் கிடைக்காமல் திணறுகிறார்கள்.
அவர்களுக்கான கேள்விகள் மிக கஷ்டமாக இருக்கிறது. மதிப்பெண்கள் குறைவாக இருப்பவர்கள் பின் தள்ளப்படுகிறார்கள். செல்வாக்கு உள்ளவர்களை அணுக வேண்டியுள்ளது. சிவப்பு நாடா முறை, இன்னும் நம்மை அறியாமலே நம்மிடம் குடிகொண்டுள்ளது. இவற்றையும் இலகு படுத்தி எல்லோருக்கும் கல்வி எல்லா தரப்பினருக்கும் கல்வி.என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள் போல் இவை எல்லா அரங்குகளிலும் ஊரின் எல்லா இடங்களிலும் நடத்தப்பட வேண்டும்.
இக்ரா கல்வி சங்கம் ஒரு புதிய கோணத்தில் தனது செயல்பாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டிய தார்மிக பொறுப்பு அதற்கு உள்ளது.வீடு வீடாக, தெரு தெருவாக செல்லவேண்டும், தேர்தலுக்கு ஓட்டுக் கேட்டுப் போவது போல் இந்த பணியையும் செய்ய வேண்டியுள்ளது.அது ஒரு கடினமான வேலைதான். இலவச ஆலோசனை சொல்வது எளிது அதை செய்துபார்தால்தான் அதன் கஷ்டம் விளங்கும். ஆனால் அப்படி ஒரு முயற்சியை எல்லா பொது நல அமைப்புக்களுடனும் கைகோர்த்து செய்யும்போது அது இலகுவாகும். ஊர் தழுவிய ஒரு பொது அரங்கில் இது பேசப்பட வேண்டும்.
வருடத்துக்கு ஒரு முறை சந்தியுங்கள் முதன்மை வீரர்களை என்று அறிவித்து கூட்டம் கூடி வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினால் மட்டும் போதாது. வெற்றிக்கு முயற்சித்து தோல்வி கண்டவர்களையும் வீட்டிலே விரக்தியுடன் முடங்கி கிடப்பவர்களையும் அடையாளம் கண்டு அவர்களை கை தூக்கி விடும் பணியிலும் நாம் மும்முரமாக இறங்க வேண்டும். இது காயல்நல மன்றங்களுக்கு ஒரு பெரிய சவால், இக்ராவுக்கு ஒரு பெரிய நெருப்பாற்றில் நீந்தி வரும் சோதனை. ஆனால் இந்த சோதனையை நாம் சாதித்து வெற்றி கண்டே ஆக வேண்டும். அப்போதுதான் கல்வியில் பின் தங்கியவர்கள் என்று யாரும் இங்கு இல்லை. கல்வி பற்றி என்ன தேவை சந்தேகங்கள் வந்தாலும் இருக்கவே இருக்கிறது இக்ரா.வாருங்கள் போய் கேட்போம் என்று சாதாரண மனிதனும் சந்தைக்கு செல்வது போல் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு இக்ராவை நோக்கி வரவேண்டும். ஏனெனில் இக்ரா ஒரு பெரும் கல்வி சக்தியாக இந்த ஊரில் விசுவரூபம் எடுத்துள்ளது.
இது எனது ஆசை. கனவு. சில கனவுகள் நிஜமாவதில்லை. சில நிஜங்கள் கனவாகவும் கானல் நீராகவும் காட்சி தரும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட காவியங்கள் ஒவ்வொரு வரியாகத்தான் எழுதப்பட்டன.ஆயிரம் மைல் தூரங்களை ஒவ்வொரு எட்டாக வைத்துதான் கடக்க வேண்டும்.ROME IS NOT BUILT IN A DAY.
இதை படிப்பவர்கள் அவரவர்களுக்கு தெரிந்த யோசனையை முன் வையுங்கள். விதர்ப்பமான விவாதங்கள் வேண்டாம்.
புல்லாங்குழலில் பல ஓட்டைகள் இருக்கின்றன. அதில் காற்று புகும் போதுதான் புது புது இசை உருவாகிறது. அதே போல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சிந்திக்கும் ஆற்றலை அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக கொடுத்துள்ளான். வாருங்கள் நாம் ஆரோக்கியமாக விவாதிப்போம், இந்த சமுதாயம் ஏற்றம் பெற...கல்லாமை இல்லாமை இந்த ஊரில் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.
அல்லாஹ் இந்த புனித ரமலானில் நமது சிந்தனை ஓட்டங்களை நெறிப்படுத்தி, நமக்கு எல்லா விதமான நன்மைகளையும் தந்தருள்வானாக. ரமலான் முபாரக்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross