இது விவாதமல்ல...புரிந்துணர்வுக்காவே...! posted byM.N.L.Mohamed Rafeeq (kayalpatnam)[22 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28831
சுமார் எட்டு ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தி வரும் இக்ராஃ மற்றும் காயல் ஃபஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுக்கு பாராட்டுக்கள்!
பொதுவாக இது வேறு யாருக்காகவோ அல்லது மாநிலத்தில் முதல் மாணவர்களை குஷிப்படுத்துவதற்காகவோ நடத்தும் நிகழ்வல்ல! முழுக்க முழுக்க நமதூரில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்கள், முதல் அந்தஸ்த்தைப் பெற்ற பள்ளிகள், 1000க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தி சிறப்பிக்கும் ஓர் அற்புதமான தொலை நோக்கு சிந்தனை கொண்டு நடத்தி வரும் பயனுள்ள நிகழ்ச்சி!
இதில் நூற்றுக்கணக்காண பள்ளி மாணவ மாணவியர்கள் சுமார் ஐந்து மணிநேரம் ஓரிடத்தில் ஒன்று கூடி கலைநிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டம் இல்லாமல் முழுக்க முழுக்க கல்விக்கான மேம்பாட்டையும் சிறப்புக்களையும் அதற்கான அங்கீகாரத்தையும் கண்டு களித்து பயன் பெறுகின்றனர்.
தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவுடன் நூற்றுக்கணக்கான மாணவர்களின் விபரங்களை பள்ளிகள் மூலம் பெறப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளை சுமார் ஒரு மாத காலமாக ஓய்வு ஒளிவின்றி கல்வி ஆர்வலர்கள் குழு மிகுந்த சிரமங்களுக்கிடையில் சரிபார்த்து நெறிப்படுத்தி பரிசுகள், பணமுடிப்புகள், சான்றிதழ்கள் என பல்வேறு பணிகளை பல குழுக்களாக பிரித்து செய்து முடிப்பதை நான் கண்கூடாகக் கண்டு வியந்தேன்.
இவை அனைத்தும் நமதூர் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத்தானே என அகமகிழ்ந்தண்டு.
மாநிலத்தின் முதல் மாணவர்களை அழைத்து வந்து கலந்துரையாடச் செய்வது மட்டுமல்ல பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும்.
நாம் வழிச்செலவு கொடுத்து அழைத்து வந்த அவர்கள் தங்களின் மதம் சார்ந்த வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லக்கூடாது என்பது எவ்விதத்தில் நியாயம்? இதுவே நம் மதத்தைச் சார்ந்த மாணவர் முதலிடத்தில் வந்து அவர்களை நாம் அழைத்து வரும்போது அவர்கள் அருகிலுள்ள மசூதிகளுக்கோ அல்லது நம் மதம் சார்ந்த சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களுக்குச் செல்வதை கூடாது என்று நாம் சொல்வது ஓர் குறுகிய மனப்பாண்மை என்றாகிவிடும். மாணவர்கள் நலன் கருதி நடத்தும் இந்நிகழ்வை மதச்சாயம் பூசி மங்கச் செய்வது கல்விப்பணிக்கு உகந்ததல்ல என்பது எனது கருத்து.
இன்னும் வருங்காலங்களில் இதை விடவும் சிறப்பாக நடத்தி நம் காயல் மாணவ மானவியர்கள் முதலிடம் பெற முக்கிய காரணியாக இவ்விரு அமைப்புக்களும் முழு முயற்சி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இறைவன் அருளால் நம் மாணவர்களை அரியாசனத்தில் அமர்த்தி அழகு பார்க்கும் அந்நாள் வெகு தூரத்தில் இல்லை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross