மக்களுக்கு நன்றாகத் தெரியும் மகராசன்களின் லட்சணம்....! posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[23 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28859
நான் எழுதிய கருத்துப்பதிவை மேற்கோள் காட்டியமைக்காகவே இந்த பதிலை தருகின்றேன்.
அன்பு நண்பர் Vilack SMA அவர்களே...? யார் இப்புனித ரமழான் மாதத்தில் பொய்யுரைக்கின்றார்? நான் கருத்தில் கூறிய நகர்மன்ற உறுப்பினர்களாகிய மஹான்களின் பரிசுத்தமான அத்தனை வார்த்தை ஜாலங்களுக்கும் என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. உங்க பரிசுத்தமான பத்தரைமாற்றுத் தங்கங்களின் வாய் ஜாலங்களும் வண்டவாளங்களும் இணையதளங்கள் மூலம் மக்களாகிய நாங்கள் அறிந்து கொண்டோம். இதற்குத்தானே ஊடகம் உள்ளே வரக்கூடாது என ஊளையிட்டனர்.
சேர்மன் ஆபிதா செய்த தவறுதான் என்ன? உங்கள் மரியாதைக்குரிய, போற்றுதலுக்குரிய, ஐக்கிய பேரவையின் முச்சரிக்கையில் கையெழுத்திட மறுத்ததுதானே...? ஒரு வேளை கையெழுத்து இட்டிருந்தால் உங்கள் அபிமானத்திற்குரியவர்களால் ஆபிதாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடியிருப்பீர்கள்.
இந்த மண் எங்கள் சொந்த மண்! இதில் நாட்டாமை பண்ணுவதற்கோ, கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கோ ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம். அவர்களின் கொட்டம் அவர்கள் விலை கொடுத்து வாங்கிய அடிமைகளிடம் மட்டுமே இருக்கட்டும். எங்களிடம் வேண்டாம்.
ஊர் பெரியவர்கள் மதிப்பிற்குரிய பெருந்தகைகள் எம்மை வழிநடத்தும் மனசாட்சியுள்ள அந்த மூத்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். யாருக்கு ஈகோ...யாருக்கு....(?) வேண்டாம் நோன்பு வைத்துள்ளேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross