இறைவனுக்கு பயந்த மக்களை தேர்ந்தெடுங்கள். posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[26 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2889
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
செக் மோசடி வழக்கில் நேரிடையாகவோ , மறைமுகமாகவோ கஸ்ஸாலி மரைக்காருக்கு முக்கிய பங்கு உண்டு என்பது அவர் நீதி மன்றத்தில் சரணடைந்ததிலிருந்து உறுதியாகிவிட்டது.
இந்த தொகையை இலஞ்சமாக பெற்றிருந்தால் இது அரசியல் ஊழல், எல்லா அரசியல்வாதிகளும் இப்படித்தான், இதிலே எல்லோருக்கும் பங்கு இருக்கும் என்று சொல்லி மக்கள் முணுமுணுத்து, விட்டுவிடுவார்கள்.
ஆனால் இது செக் திருடப்பட்டு, போலி கையெழுத்து போடப்பட்டு மோசடி செய்யபட்டிருப்பதாக கூறப்படுவதால், இதில் பரவலாக மற்ற உறுப்பினர்களுக்கு பங்கு இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கலாம்.
அதே நேரத்தில் ' செக் 'கள் யாருடைய பொறுப்பில் இருக்குமோ அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது ஏமாந்திருக்கலாம்.
மொத்தத்தில் இது ஒரு நம்பிக்கை துரோகம், திருட்டுக் குற்றம்.
நம் நகர்மன்றத்தில் இதற்கு முன் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை என்கிறார்கள் அது உண்மைதானா? அல்லது மக்களுக்கோ / மன்றத்திற்கோ தெரியாமல் இது போன்று எதுவும் இருந்திருக்குமோ? என்பது கேள்விக் குறியே?????
எது எப்படியோ இந்த சம்பவத்திற்கு அவசியம் விரிவான விசாரணை நடத்தி பாரபட்சமின்றி குற்றவாளிகளுக்கு தக்கத் தண்டனையைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நகர்மன்றத்திற்கும், நீதி மன்றத்திருக்கும் உரியதாகும்.
---------------------------------------------
மக்களே !
இனி வரக்கூடிய தேர்தலில் அரசியல்வாதிகளை, அதாவது எந்த கட்சியிலாவது அவர்கள் இருப்பாரேயானால் அவர்களை தேர்ந்து எடுக்காதீர்கள்.
அரசியலில் இல்லாத நல்லொழுக்கமுள்ள, இறைவனுக்கு பயந்த, நல்ல செயல்திறனுள்ள மக்களை தேர்ந்தெடுங்கள்.
இன்னும் சொல்லவேண்டுமானால் உங்கள் வார்டில் ஒருவரை நிறுத்தினால் அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டிப்போடாமல், அவரையே போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அவருடைய சொல்லும், செயலும் இருக்க வேண்டும்.
ஆ....ஹா.....! இந்த காலத்தில் அரசியல்வாதி இல்லாமல், "ஊருக்கு வேண்டிய நன்மைகளை யார் செய்து தருவார்" என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது பெறும் தவறாகும்.
--------------------------------------------------
அரசியல் வாதிகளே !
நீங்கள் எம்.எல்.ஏ. ; எம்.பி. ; அமைச்சர் என்று எதுவானாலும் இருந்துவிட்டு போங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஊராட்சி தேர்தலில் மட்டும் நிற்காதீர்கள். இது காயல்பட்டனத்தில் உள்ள அரசியல்வாதிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் வாதிகளுக்குமுள்ள வேண்டுகோள்.
ஒவ்வொரு ஊரிலும் தனிப்பட்ட நல்லவர்கள் உறுப்பினராக இருந்தால் அந்தந்த பகுதிக்கு அவர்களால் கட்டுக்கோப்புடன் நல்ல முறையில் தொண்டு செய்திட முடியும்.
ஆனால் அரசியல்வாதிகள் எவ்வளவுதான் ஒழுக்க சீலர்களாக இருந்தாலும், அவர்கள் கட்சி மேலிடம் சொல்வதற்கிணங்கி தடம் புரள வேண்டியது வரத்தான் செய்யும்.
எனவே அரசியல்வாதிகள் ஊரின் நன்மையைக் கருத்தில் கொண்டு உறுப்பினராகாமல் வெளியிலிருந்தே உங்கள் முழு ஆதரவையும் நகர் மன்றத்திற்கு அளித்து ஊரையும், மக்களையும் முன்னேற்றுங்கள் என்று அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross