இணக்கமாகப் பழகுபவர்! posted byS.K.Salih (Kayalpatnam)[25 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28926
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
என்றும் தனக்கேயுரிய புன்னகையுடன், வயது வேறுபாடின்றி எல்லோரோடும் இணக்கமாகப் பழகுபவர். நல்ல குணங்களின் புகலிடம்.
இறை விதியை மதித்தேயாக வேண்டும். இருந்தாலும் என் மனதில் பட்ட ஒரு கருத்தை இங்கே வெளிப்படுத்துவது பொருத்தமெனக் கருதுகிறேன்...
வணிகம், பணி என நீண்ட நாட்கள் சொந்த ஊரை விட்டும் வெளியிலிருப்பதை நான் சிறிதும் விரும்பாததற்கு என் மனதில் அல்லாஹ் இட்ட எண்ணங்களுள் ஒன்று இதுபோன்ற நிகழ்வுகள்...
நமக்கே தாங்க முடியாத இந்தத் துயர நிகழ்வை அன்னாரின் குடும்பத்தார் எப்படித் தாங்கிக் கொள்வர் என்பதை நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சு கனக்கிறது.
கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, அன்னாரின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் - நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீனுடன் அவர்களையும், நம்மையும் இணைந்திருக்கச் செய்வானாக...
மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
குடும்பத்தார் அனைவருக்கும் எமது அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
ஆழ்ந்த இரங்கல் மற்றும் துஆக்களுடன்
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
எஸ்.கே. குடும்பத்தினர்
கொச்சியார் தெரு
காயல்பட்டினம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross