விரிவடையும் பிரபஞ்சம் ...! posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[25 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28948
“மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்” (51:47)
நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.
நம் விழிகளில் வியப்பை தேக்கி வைக்கும் இந்த அழகிய விண்மீன் கூட்டங்கள் எந்தவித ஒழுங்கமைப்பும் , கட்டுப்கோப்பும் இன்றி வானில் சிதறிக் கிடப்பதில்லை. அவை கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, கீழ்படிந்து இயங்கி வருகின்றன.
எல்லையில்லாமல் அகண்டு விரிந்துக் கிடக்கும் இந்த அண்டவெளி வெற்றிடத்தில், நட்சத்திரங்கள் ஒரு குழுவாக வாழ்ந்து வருகின்றன. சிறிய, பெரிய குழுக்கள் பலவற்றை உள்ளடக்கி இருக்கும் இந்த விண்மீன் குழுக்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு தொடர்புக் கொண்டவை. ஒன்று மற்றொன்றை தன்பால் ஈர்த்துக் கொண்டும், மற்றவற்றால் ஈர்க்கப்பட்டும், இணங்கி இணைந்து இயங்குகின்றன.
“………the total number of stars in the universe is probably something like the total number of grains of sand on all the seashores of the world. Such is the littleness of our home in space when measured up against the total substance of the universe.” “உலகில் உள்ள எல்லா கடற்கரைகளிலும் எவ்வளவு மணற் துகள்கள் நிறைந்து உள்ளனவோ, அதைப் போன்றதொரு தொகை கொண்டதாகவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் யாவும் திகழ்கின்றன.
இப்பேரண்டத்தில் பொதிந்துக் கிடக்கும் பொருட்கள் அனைத்துடனும் நாம் நமது புவி எனும் வீட்டை கொஞ்சம் அளந்து பார்ப்போமெனில், அது இந்த வின்வெளியில் ஓர் அற்பத் தூசாகவே காட்சி தரும்.” ஒரு Galaxy யில் மட்டும் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதாம். நாம் ஆகாயத்தில் காணும் விண்மீன் கூட்டத்தை பால்வீதி Milky Way என்கின்றனர். இந்த 10,000 கோடி நட்சத்திரங்களில் மின்னி மிளிரும் ஒரு நட்சத்திரம் தான் நமது சூரியன். Miky Way, Galaxy அடுத்துள்ள கேலக்ஸிக்கு பெயர் அண்ரோமிடா கேலக்ஸி என்று பெயர். இந்த கேலக்ஸியில் மட்டும் 40,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன.
ஒரு விண்மீன் குழுவில் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளது போல் இந்த பேரண்டத்தில் 10,000 கோடி Galaxy கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நட்சத்திரக் கூட்டங்கள் ஒன்றை விட்டு மற்றொன்று எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தில் ஓடுகின்றன.
“நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை பிரபஞ்சத்தின் பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்கு காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?” (41:53)
வியப்பும் மலைப்பும் தோன்ற விரிந்து காணப்படும் இந்த அற்புதமான பேரண்டத்தை அளித்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதை இன்றைய அறிவியல் தெளிவாக்குகின்றன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross