Re:...இரவின் மகிமை posted bymackie noohuthambi (kayalpatnam)[30 July 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29074
இரவு நேரங்கள், களியாட்டங்களுக்கும் தொலைக் காட்சிகளில் அந்தரங்க காட்சிகள் அரங்கேறுவதற்கும உரிய நேரங்கள்.
இஸ்லாம் அதற்கு முற்றிலும் வேறுபட்டு மாறுபட்டு அந்த நேரம் இறைவனை நெருங்குவதற்கு உரிய நேரமாக மாற்றி காட்டுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், இறைவனே அடியானை நெருங்கி வந்து அவன் நெக்குருகி கேட்கும் பிரார்த்தனைகளை அங்கீகரிக்கிறான் என்ற செய்தி உலமாக்களால் சொல்லப்படுகிறது. அதுவும் புனிதம் மிக்க ரமலான் மாதத்தின் பிந்திய பத்து நாட்களை பற்றி நபிகள் நாயகம் அவர்கள் மிகவும் சிலாகித்து கூறியுள்ளார்கள்.
இந்த சஹர் வேளையில் ஒரு கூட்டம் கூடி ஊர் மக்களின் நல்வாழ்வு பற்றி சிந்திப்பது சிந்தை குளிர செய்கிறது. கை அளவு உள்ளம் வைத்து கடல்போல் ஆசை வைத்து நம்மை அல்லாஹ் படைத்துள்ளான். "நான்" "எனது" என்று சிந்திக்காமல் "நாம் நமது" என்று சிந்திக்கும் உங்கள் உள்ளங்கள் உயர்ந்தவை.
உள்ளத்தில் இரக்க சிந்தனையையும் அரக்க சிந்தனையையும் அவனே படைத்துள்ளான்.
தாய்லாந்து காயல் நல மன்ற சகோதரர்களின் சிந்தனைகள் சிறகடித்து பறந்தாலும். இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் எவ்வளவு தூரம் பறக்க முடியும். பொருளாதார வசதிகள் என்ற இறக்கைக்கு பலம் சேர்க்க சந்தாக்கள் என்ற ஊட்ட சத்து மிக இன்றியமையாதது என்பது உண்மைதான்.
ஆனாலும் சில எட்ட முடியாத தூரத்துக்கு சிறகை விரிக்க நினைப்பதாக என் மனதுக்கு படுகிறது. குறிப்பாக பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள் பிலால்களுக்கு பெருநாளைக்கு மட்டும் வருடம் ஒரு முறை தலா 5000 கொடுக்க நினைப்பதை மறு பரிசீலனை செய்யுங்கள்.
மாறாக இங்கே பள்ளிவாசல்களில் மாத ஊதியங்களை வருடம் ஒருமுறை 20 அல்லது 25 விழுக்காடுகள் அதிகரித்து கொடுக்க பரிந்துரை செய்யுங்கள். ஒரு கட்டடம் வாடகைக்கு விடும்போது முன்பணம் அதிகம் தாருங்கள் என்று கேட்பதை விட மாத வாடகை கூடுதலாக கேட்பதே அறிவுடைமை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு மீனை உதவியாக கொடுப்பதை விட நிரந்தரமாக மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது சால சிறந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இமாம்கள் பிலால்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய கண்ணியம் மகிமை நம் உள்ளங்களில் நிறைந்து காணப்பட்டால் அதுவே ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும்.
தற்போது தினசரி பெருகி வரும் வாழ்க்கை செலவை சமாளிக்க இந்த பரிந்துரைதான் சரியான தீர்வு. பள்ளிவாசல்கள் வருமானம் இல்லையே என்று சொல்வார்கள். அதற்கு உண்டான வழி வகைகளை ஆராயலாம். வீண் செலவுகளை குறைக்க, பள்ளி வருமானத்தை அதிகரிக்க அந்தந்த முஹல்லாக்கள் ஆவன செய்யலாம். பல லட்சங்கள் செலவு செய்து பள்ளிவாசல்கள் புதுப்பிக்கப் படுகின்றன. ஆனால் விளக்குகளால், குளிர் சாதனங்களால் அவை அலங்கரிக்கப்படுகின்றனவே தவிர, அங்கே 5 வேளை ஜமாத்துடன் தொழுவதற்கு எத்தனை பேர் கூடுகிறார்கள். அல்லாஹ் இந்த அலங்கரிப்பைதான் ஏற்றுக் கொள்கிறான். இந்த நிலை மாற வேண்டும். உங்கள் நல் ஆலோசனைகளை அதற்கு வழங்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
ஆனாலும், பயணங்கள் முடிவதில்லை. ஆசைகள், தேவைகள் ஆகியற்றுக்கு எல்லைகள் இல்லை. WANTS ARE RECURRING. WANTS ARE SATIABLE... MEN MAY COME AND MEN MAY GO, BUT WANTS WILL GO FOR EVER.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross