சொல்லால் மிக அழகானவன் யார்? posted bySalai.Mohamed Mohideen (Bangalore)[01 August 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 29129
நேற்று என் அலுவலகத்திலே மாற்று மத நெருங்கிய நண்பர்களுடன் மிகப்பெரிய ஒரு விவாதம். எதேச்சையாக பேசிக்கொண்டிருக்கும் போத நண்பர் ஒருவர் (தனது சிறுபிராயம் முதல் இஸ்லாமிய நண்பர்கள் வட்டாரத்தில் வளர்ந்து வந்தவர்) குண்டை தூக்கி போட்டார்.
முதலில் யூத மதமும்... அதன் பின்னர் கிருத்துவ மதமும் கடைசியில் தான் இஸ்லாம் தோன்றியது (அதாவது ஆபிரகாமிலிருந்து ஜீசஸும் பின்னர் முஹம்மது நபியும்... அதற்கு முன்னர் இஸ்லாமே இல்லை) என்று தான் (பொதுவாக பல மாற்று மத சகோதரர்களும் கூட) இத்தனைவருடமாக (தவறுதலாக) ஆணித்தரமாக நம்பிக்கொண்டிருக்கும் ஒரு விடயத்தை, பா. ராகவன் அவர்கள் எழுதிய 'நிலமெல்லாம் ரத்தம்' என்ற புத்தகத்தையும் துணைக்கு கொண்டு வந்தார்.
“நிலமெல்லாம் ரத்தம் (பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு பற்றியது... அருமையான புத்தகம்)” என்ற புத்தகத்தில் மூன்று மதங்களுக்கும் பொதுவான நபியாக கருதப்படும் இப்ராஹீம் (ஆபிரகாம்) நபியவர்களின் காலத்திலிருந்து ஆசிரியர் அத்தியாத்தை தொடங்குகின்றார். அதை வரலாற்று ஆதாரமாக வைத்து என் நண்பர் நான் கூறும் மாற்று கருத்துக்களை (விளக்கத்தை) ஏற்கமறுத்து விட்டார்.
அதற்க்கு இன்னொரு காரணம்... தன்னுடைய இஸ்லாமிய நன்பர்கள்' தன்னிடம் ஆபிரகாமுக்கு முன்னர் கூட இஸ்லாம் இருந்தது என்று ஒரு தடவை கூட கூறியதில்லையே அல்லது கூற கேட்டதில்லையே என்பதும். அவருக்காகத்தான் அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன்.
இஸ்லாமிய நண்பர்கள் வட்டாரத்தில் வளர்ந்து வந்த இவர் கூட முஹம்மது (நபி) தான் இஸ்லாம் தோற்று வித்தார் என்றபோது... இவரை சுற்றி இருந்த இஸ்லாமிய நண்பர்கள், தங்களுக்குள் மச்சான் மாப்பிள்ளை என்று பல விடயங்களை பகிர்ந்து கொண்டாலும் சத்திய இஸ்லாத்தின் வாடையை பரப்ப தவறவிட்டனரோ என்ற எண்ணம் தோன்றியது. இது போலத்தான் நம்மில் பலர் இருக்கின்றோம்.
நம்மை சுற்றி (குறிப்பாக நமதூரில்... நம் வீட்டு பணியாள் முதல்) எத்தனையோ மாற்று மத சகோதரர்கள் நம் அன்றாட வாழ்வில் இருக்கிறார்கள். அவர்களிடம் எதையதையோ பேசும் நாம் என்றாவது 'இஸ்லாம் எப்படி தோன்றியது' அல்லது குர்ஆன் - இஸ்லாமிய நடை(நெறி)முறைகளை பற்றி தகவல் பரிமாற்ற மாகத்தான் செய்திருக்கின்றோமா.. என்று நாம் ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும். அதற்கான வாய்ப்பிருந்தும் அதனை செய்ய தவறுகின்றோமே என்ற கவலைக்கூட இல்லாமல் காலத்தை தள்ளி வருகின்றோம்.
முஸ்லிமல்லாத மக்களுக்கு திருக்குர்ஆனை அறிமுகப்படுத்தும் நோக்குடன் - திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதிகள் வழங்கிய நிறுவனத்தினருக்கும் இணைய தளத்தின ருக்கும் இறைவன் அருள் புரிவானாக !! தொடரட்டும் உங்கள் சேவை !!
“அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, (தானும்) நற்செயல்செய்து; நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?” (41:33)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross