செய்தி: அத்வானி தமிழகம் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் வீடுகளில் சோதனை: காயல்பட்டினம் பற்றி இராம.கோபாலன் அவதூறு! முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கடும் கண்டனம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாக்களிப்பதில் கவனம் வேண்டும். posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[02 August 2013] IP: 119.*.*.* China | Comment Reference Number: 29156
காவித்தீவிரவாதிகள் வழக்கமாக குரைப்பது போலத்தான் இதுவும். தேர்தல் நெருங்க நெருங்க இவர்கள் குரைப்பது அதிகமாகிவிடும். நாம் இவருடைய பேச்சை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை. காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் எல்லாவற்றையும் கண்காணித்து கொண்டேதான் இருப்பர். எனவே இவர் சொல்வதால் நமக்கு கெடுதல் எதுவும் ஆகிபோய் விடுவதில்லை.
எனினும் இந்துத்துவ வாதிகளின் திட்டங்களை முறியடிக்க , நாம் தேர்தல் காலங்களில் கவனமாகவும் ஒற்றுமையாகவும் செயல்படவேண்டும்.
குறிப்பாக மத்திய அரசை தேர்வு செய்வதில்.திராவிட கட்சிகளை நோக்கி நம்முடைய தேர்வு இருக்கக்கூடாது. திராவிட கட்சிகள் எந்த கூட்டணியில் இருந்தாலும் சரி , மத்திய தேர்தலில் நாம் ஒட்டுமொத்தமாக காங்கிரசை ஆதரித்தால் மட்டுமே , காவி பயங்கரவாதத்தை யும் அவர்களின் சதிசெயல்களையும் முற்றுலுமாக முறியடிக்க முடியும். நம்முடைய இந்த வேகம் தேர்தலில் எதிரொலிக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல் கட்சிகளும்கூட பல்வேறு அணியில் பிரிந்திருக்காமல் ஓரணியில் திகழவேண்டும்.அப்போதுதான் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கும்போது குழப்பம் ஏற்படாமல் இருக்கும். தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 12% சதவிகிதம் இருப்பதாக ஒரு தகவல்.வாக்காளர்களில் நாம் இந்த 12% அடிப்படையில் இருக்கிறோமா என தெரியவில்லை. வாக்காளர் பட்டியலில் நம் பெயர்கள் இருக்கிறதா என நாம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.தற்போதைய சூழ் நிலையும் இந்த 12% மும் ஓரணியில் இருந்தால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே வாக்களிக்கும்போது ஒற்றுமை ஓங்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross