செய்தி: அத்வானி தமிழகம் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் வீடுகளில் சோதனை: காயல்பட்டினம் பற்றி இராம.கோபாலன் அவதூறு! முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கடும் கண்டனம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பகைவர்க்கும் அருள்வாய் நன் நெஞ்சே posted bymackie noohuthambi (kayalpatnam)[02 August 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 29157
திருமிகு ராமகோபாலன் அவர்களின் பேச்சுக்கு அருள்மிகு மாதத்தில் முனீருல் மில்லத் அவர்கள் அளித்துள்ள பதில் எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டியது.
தன் வீட்டில் மலம் கழித்து விட்டு சென்ற யஹூதியின் செயலை நபிகள் நாயகம் எப்படி ஆட்கொண்டார்கள், அதனால் அந்த யஹூதியே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான் என்பது போன்ற பல்லாயிரம் நபிவழி செய்திகள் நாம் அறிந்திருக்கிறோம்.
எனவே JS புகாரி காக்க இங்கு பதிவு செய்துள்ள கருத்தை நானும் வரவேற்கிறேன். கட்டெறும்பு கடித்தா இந்த கருங்கல் கரையப்போகிறது, அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவை இல்லை. நமது முதல்வர் அவர்கள் ஜாதி வெறியை தூண்டுபவர்களையும் மத நல்லிணக்கத்துக்கு ஊரு விளைவிப்பவர்களையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவேன் என்று சொல்லி இருக்கிறார்கள். சங்கர ராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியாரையே கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.ராமகோபாலன் அவர்கள் செய்தியை முதல்வரும் படித்திருப்பார். அவர் தக்க சமத்தில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்..
இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால், கீழ்ப்பாக்கம் மன நோய் மருத்துவமனையில் இருப்பவர்கள் பேசுவதை எல்லாம் நாம் விமரிசிக்க வேண்டி வரும். அந்த மருத்துவ மனையில் உள்ள மருத்துவர்கள் அதை எப்படி உதாசீனம் செய்து விட்டு அவர்களுக்கு மருந்துகளை கொடுப்பார்களோ அதை போல் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களது நற்பண்புகள், எதிரிக்கும் பகைவர்களுக்கும் அவர்கள் எப்படி உதவினார்கள் என்ற சரித்திர சான்று நூல்களை திரு ராமகோபாலன் அவர்களுக்கு சகோதரர்கள் அனுப்பி வைத்தால் நல்லது.
என்ன இருந்தாலும், நாளை இஸ்லாத்தை தழுவி நமக்கெல்லாம் இமாமத் செய்யும் நல் ஹிதாயத் அவருக்கு அல்லாஹ்வினால் அருளப்பட்டால். நாம் அதை வேண்டாம் என்றா சொல்ல போகிறோம். இஸ்லாத்தை நோக்கி மக்கள் சாரி சாரியாக வரும்போது இவரது பேச்சுக்கள் இமய மலையின் அடியிலே உள்ள கூழாங்கற்களை போல் யாரும் கவனிப்பாரற்று போய் கொண்டிருக்கிறது என்பது தினமலர் ஆசிரியருக்கு தெரியா விட்டாலும் அவர் உள் மனதில் அவர் இஸ்லாத்தை பற்றி மானசீகமாக நல்லெண்ணம் வைத்திருக்கிறார். கூடிய விரைவில் அவரும் அவர் குடும்பத்தாரும் இஸ்லாத்தை தழுவ இருக்கிறார்கள் என்ற செய்தி வெளி வரும்போது, அங்கே ராம கோபாலான் போன்றவர்களும் இருப்பார்கள். அல்லா கபூல் செய்வானாக.
நபிகள் நாயகத்தை ஒழிக்க புறப்பட்டு வாழ் ஏந்தி வந்தவர்கள் நபி தோழர்களாக, நபியின் மேனியில் ஒரு ஈ எறும்பு கூட ஏறவிடாமல் அவர்களை பாது காக்கும் அரணாக மாறினார்கள் என்ற சரித்திர உண்மைகள், ராமகோபாலன் போன்றவர்கள் அறிந்திட செய்ய வேண்டியது நம் கடமை. இஸ்லாதை பற்றி நமக்குள்ளே பேசிக் கொண்டிருப்பதை விட, ராமகோபாலன் போன்றவர்களுக்கு, ஜாகிர் நாயிக் போன்றவர்கள் ஆற்றும் உரைகளின் தமிழாக்க குறுந்தகடுகளை அனுப்பி வைக்க ஆவன செய்யும் படி இந்த புனிதம் மிக்க ரமலானில் இஸ்லாமிய இணைய தளங்களில் தினசரி பேசும் பல் வேறு உலமாக்களை வேண்டிக் கொள்கிறேன். ஹிதாயத் அல்லாஹ்விடம் உள்ளது. அதை அவன் நாடியவர்களுக்கு கண்டிப்பாக கொடுப்பான். ராமகோபாலன் அவர்கள் அந்த லிஸ்டில் இருந்தால், நாம் தடுக்க முடியுமா.அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.
இந்த இணைய தளத்தில் வரும் ஆரோக்கியமான விமர்சனங்களை மட்டும் இதன் நிர்வாகி அவர்கள் ராமகோபாலன் அவர்களுக்கு மின் அஞ்சல் செய்தால் நல்லது. .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross