நோன்பு பெருநாள் !! posted bySalai.Mohamed Mohideen (Bangalore)[02 August 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 29172
இத்தனை வருடங்கள் அ(மெரிக்கா)க்கரையில் உக்காந்து கொண்டு இவைகளை ஊடக செய்திகள் வாயிலாக அவதானித்து கொண்டிருந்தாலும் அதன் பாதிப்பு (கொண்டாட்ட அளவில்) இல்லை. நோன்பு & ஹஜ் பெருநாளும் மிகச்சிறப்பாக ஒற்றுமையாக சந்தோசமாக அங்குள்ள மக்களுடன் கொண்டாடி வந்தோம்.
நான்கு வருடம் கழித்து நமது நாட்டில் / ஊரில் பெருநாள் கொண்டாடப் போகின்றோம் என்ற ஆவல் மனதில் இருந்தாலும் அதில் ஏதோ ஒரு முழு சந்தோசம் இல்லை. அதற்கு காரணம் ஒரே ஊரில்... பல குடும்பங்களில் இரண்டு/ மூன்று பெருநாட்கள். நமதூரை சார்ந்த மாற்று மத சகோதரர் என்னை பார்த்து கேட்டார்... நீங்கள் மூன்று நாளில் எந்த நாள் பெருநாள் கொண்டாடுவீர்கள் என்று !!
"நாளைக்கு பெருநாள் நம்மளுக்கு நல்ல நாள் ..கப்பக்கோழி அறுத்து ..." என்ற பாடலை சந்தோசமாக சிறு பிராயத்தில் நம்மில் பலர் பாடியதுண்டு. இன்று அதற்கும் மவுசு இல்லை . நாளைக்கு ...அடுத்த நாளைக்கு... அதற்க்கும் அடுத்த நாளைக்கு என்றாகி விட்டதினால் !'
பல வருடங்களுக்கு முன் நான் வசித்த நார்த் கரோலினாவில்... இந்தியா - பாகிஸ்தானை சார்ந்த மக்களை உள்ளடக்கிய பள்ளியில் ஒரு நாளும், ஏனைய நாட்டு மக்களை உள்ளடக்கிய பள்ளிகளில் மற்றொரு நாளும் பெருநாள் கொண்டாடி வந்தனர். பின்னர் அவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு, ஒரு சமரச உடன்படிக்கையை மேற்கொண்டு (give & take) இன்று வரை ஒரே நாளில் கொண்டாடி வருகின்றனர்.
இன்று வட அமெரிக்காவில் பெரும்பாலான இடங்களில் Islamic Society of North America [ISNA], Fiqh Council of North America [FCNA] அறிவிப்பை கொண்டு நோன்பு மற்றும் பெருநாட்களை கொண்டாடி வருகின்றனர். அது போன்று நமது நாட்டிலும் ஒன்று ஏற்படுத்தபட்டால் மிகவும் நல்லது !!. ஆனால் அதை பாலோ பண்ணுவார்களா என்பதும் கடினமே !!
ஏது எப்படியோ நமது மாநிலத்தில் குறிப்பாக நமதூரில் மூன்று பெருநாட்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போய்விட்டது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தான் பூண்ட மார்க்க கொள்கை / நம்பிக்கையில் அவ்வளவு உறுதியாக இருக்கின்றார்கள்... அங்கே சமரசம் என்ற பேச்சுக்கு இடமே இல்லாத அளவுக்கு !!
பலநேரங்களில் இதனை நான் நினைத்ததுண்டு. மிகவும் எளிதான நம் மார்க்கம்... அநியாயத்துக்கு கடினமாக்கபட்டு வருகின்றோதேன்று. அதிலும் குறிப்பாக இந்திய துணை கண்டத்தில். வல்ல ரஹ்மானே அனைத்தையும் அறிந்தவன் !!
அனைத்து காயலர்களுக்கும் எனது இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள் !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross