செய்தி: ரமழான் 1434: நோன்புப் பெருநாளுக்குப் பிறகு காயலர்களுக்கான விடுதி செயல்படும்! இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Fantastic Iftaar Meet !! posted bySalai.Mohamed Mohideen (Bangalore)[04 August 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 29207
நலமன்றத்தின் ஜகாத் நிதியை நான் சார்ந்துள்ள மைக்ரோ காயலுக்கும் பகிர்ந்தளித்தமைக்காக முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்! எல்லாபுகழும் இறைவனுக்கே!!
நான்கு வருடங்களுக்கு முன் இக்காயல் நலமன்றம் தொடங்கிய புதிதில் அவர்களின் பொதுக்குழு கூட்டத்தில் ஒரு முறை கலந்து கொண்டேன். அதற்கு பின்னர் இப்போதுதான் இப்தார் ஒன்றுகூடலில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்! மிகவும் அருமையான ஏற்பாடு... அனவைரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் போன்றதொரு உணர்வு!!
பெங்களூர் காயல் நல மன்றம் ஆரம்பிபதற்கு நண்பர்களான KKS ஸாலிஹ், குலாம், ஹாபில் அப்துல்லாஹ் , ஷேக்னா போன்றவர்களின் கடின உழைப்பு வீணாகவில்லை. அதற்கு சாட்சியே அம்மன்றத்தின் அருமையான செயல்பாடுகளும் & ஒருங்கினைப்புகளும் !!
மைக்ரோ காயலின் சேவைகளை பற்றியும், கூடிய விரைவில் மலர இருக்கும்... மலர்ந்து சேவை எனும் நறுமணத்தை காயல் எங்கும் பரப்ப இருக்கும் 'ஷிபா'விற்கு மன்றத்தின் பங்களிப்பின் அவசியம் பற்றியும் மற்றும் கடந்த வருடங்களில் ஊடகங்கள் வாயிலாக நான் அவதானித்த மன்றத்தின் சேவைகள் மென்மேலும் சிறப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் (Suggestions) பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு கிட்டியது.
மன்றத்தின் தலைவர் ஜெய்த் அவர்கள் மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றார் என்று மன்றத்தின் செயல்பாடுகள் வாயிலாகவும், மன்றத்தினர் பலர் கூறக் கேட்டாலும்... அதனை கண்கூடாக நானும் அவதானித்தேன்.
இந்த ஒன்று கூடலில் நான் அதிக நேரம் செலவழித்தது... மர்ஹூம் ஆடிட்டர் புகாரி அவர்களின் மகன் அப்துர்ரஹ்மான் அவர்களிடம்தான். அதுவும் முதல் சந்திப்பு... அருமையானதொரு சமூக கருத்து பரிமாற்றம்.
அதற்கு காரணம், தனது தந்தையை (காயல் நல மன்றம் உதயாமவதற்கு முன்னரே பெங்களூரை நோக்கி படையெடுக்கும் நமதூர் மக்களுக்கு வேலைகளில் உதவி & தங்குவதற்கு இடம் என தந்துதவி சேவையாற்றியவர்) போல் தானும் சமூக சேவைக்கு சளைத்தவர் அல்ல என்ற உயரிய எண்ணமும், மன்றத்திற்கு பல வகையிலும் அவர் அளித்து வரும் தொடர் ஆதரவும் மற்றும் நிமிடத்தை காசாக்க நினைக்கும் இப்பூலகத்தில் மன்றத்திற்கு அடுத்தது என்ன (எதை) செய்யலாம் என்ற கருத்து பரிமாற்றமும்தான் !!
KCGC யின் “இவரைப்போல் நீங்களும் சாதிக்கலாமே...?" நிகழ்ச்சியின் கதாநாயகரை தன்னகத்தே கொண்டே இம்மன்றம்... பாசமிகு சகோ. இப்ராஹிம் அவர்களை முழமையாக பயன்படுத்தி நம் இளைய சமுதாயத்திற்கு நல்லதொரு ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் தொடர் நிகழ்சிகளின் வாயிலாக ஏற்படுத்தி தர வேண்டுகின்றேன்.
இம்மன்றத்தின் இன்னொதொரு சிறப்பு... பெரும்பாலானோர் நன்கு படித்து பல துறைகளில் உயர்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர் பட்டாளம். இவர்களில் பத்துக்கும் மேற்ப்பட்டோர் ஹாபிழ்கள் (கூடுதல் தகுதி) வேறு. இவர்களிடம் அளப்பரிய ஆற்றல் கொட்டிக் கிடக்கின்றது... இவைகள் முறையாக முழுமையாக அறுவடை செய்யப்பட்டால் வளமிக்க நாளைய (காயல்) சமுதாயத்தை உருவாக்க இவர்களின் பங்களிப்பும் அற்புதமாக இருக்கும் !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross