Re:...மெய்சிலிர்க்க விற்கும் செய்தி. posted bymackie noohuthambi (kayalpatnam)[05 August 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29219
ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி அவர்கள் இங்கே பதிவு செய்துள்ள செய்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. இதே போல்தான் ஈராக் குவைத் யுத்தத்தின்போது சவூதிக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் "அன குவைத்தி" என்று பரிதாபமாக வாய் திறந்து தங்கள் இயலாமையை தெரிவித்து தெரு ஓரங்களில் சென்றிருக்கிறார்கள். ஒரு காலத்தில் சவூதிக்கு இவர்கள் வாரி வழங்கியவர்கள் என்று சொல்கிறார்கள்.
எனவே செல்வம் உள்ளவர்கள் செல்வாக்கு உள்ளவர்கள் அவர்கள் தாம் தேடிய செல்வம், என் கெட்டிதனதால் தான் வந்தது என்று மார் தட்டாமல், இது அல்லாஹ் எனக்கு தந்தது, அல்லாஹ்வின் பாதையில், அவன் சொன்னபடி செலவு செய்ய எனக்கு அமானிதமாக தரப்பட்டது என்று நினைக்க வேண்டும்.
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். கால சக்கர சுழற்சியில் மேலே இருப்பவன் கீழே வருவான், கீழே இருப்பவன் மேலே செல்வான். எல்லாம் அல்லாஹ்வின் கையில்.
சவூதிக்கே வாரி வழங்கிய காயலர்கள் என்ற பெருமையும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அல்ஹம்து லில்லாஹ்.அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கதீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரதன் வ அஸீலா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross