Re:... posted byசாளை பஷீர் (சதுக்கை தெரு, காயல்பட்டினம்)[06 August 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 29230
ஸவூதி அரசு புனிதத்தலங்களை பராமரித்து வருவதும் குடிமக்களுக்கு உதவித்தொகை அறிவித்திருப்பதுவும் நல்ல செய்திகளே. ஒரு அரசின் அடிப்படைக்கடமையும் கூட .
உதவிகள் எல்லாம் சரிதான். சுரண்டலற்ற , வெளிப்படையான , ஏகாதிபத்திய சக்திகளுக்கு அடி வருடாத , காவல் துறையின் கெடுபிடியற்ற ஒரு அரசு என ஸவூதி அரசை கூற முடியுமா ?என்பதும் உதவித்தொகையைப் போலவே பில்லியன் டொலர் கேள்விதான் .
எகிப்தில் ஜன நாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய அரசின் கவிழ்ப்பை மிக முதலில் ஆதரித்த அரசும் ஸவூதிதான் என்பதை மறக்க இயலுமா ? அமெரிக்க , யூத வல்லாதிக்கங்களின் அடாவடிகளை கள்ள மௌனம் மூலம் அங்கீகரிப்பதும் இந்த ஸவூதி அரசுதான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross