செய்தி: நோன்புப் பெருநாள் 1434: இன்று நோன்புப் பெருநாள் இரவு! நாளை காலை 07.30 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byT.S.A. Aboothahir (ஸ்ரீ லங்கா)[07 August 2013] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 29284
அன்பின் அட்மின் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த செய்தியில் தங்கள் வாசக அமைப்பை கொஞ்சம் மாற்றி இருக்க வேண்டும்.
இன்று நோன்புப் பெருநாள் இரவு! நாளை காலை 07.30 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!! என்று போட்டிருகிறீர்கள்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு. இன்று நோன்புப் பெருநாள். என்று போட்டிருந்தால் அவர்களை சார்ந்தோருக்கு பெருநாள் என்று அறிய முடியும்.
மஹ்லரா ஜாவியா உலமாக்களின் தகவல் இது வரை பதிவு செய்யப்படவில்லையே? தங்களின் இனிய இணையதள செய்தியை எதிர்பார்த்தே பல நாடுகளிலும் நம்மவர்கள் இருக்கிறார்கள். உங்களின் செய்தி ஒட்டுமொத்த மக்களுக்குமானதாக தொனிக்கிறது. நமதூரின் சூழ்நிலையை தெரியாத வெளிஊர் மக்கள் காயல்பட்டணத்தில் பெருநாள் என்று தவறுதலாக நினைத்து விடவும் கூடும்.
மட்டுமின்றி செய்தி தாள் நிருபர்களும் கூட ஊருக்கு நேரில் வராமல் உங்கள் செய்தியை முன் வைத்தே பத்திரிக்கையிலும் செய்தி போடுகிறார்கள்.
எனவே உங்களுக்கு பொறுப்பு அதிகம் உள்ளது.
மற்றபடி அல்ஜாமிஉல் அஸ்ஹரின் அறிவிப்பை குறித்து இதில் நான் எந்த கருத்தும் கூறவில்லை.
Moderator: மஹ்ழரா, ஜாவியா உலமாக்கள் கூட்டம் ஆகஸ்ட் 08 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நடைபெறும். அவ்வமயம் அங்கு வெளியிடப்படும் அறிவிப்பு இவ்விணையதளத்தில் வெளியிடப்படும். கருத்தாளரின் இதர ஆலோசனைகள் கருத்திற்கொள்ளப்பட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross