செய்தி: நோன்புப் பெருநாள் 1434: இன்று நோன்புப் பெருநாள் இரவு! நாளை காலை 07.30 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நோன்புப் பெருநாள் posted byIsmail Sufi (Muscat)[09 August 2013] IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29323
அட்மின் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். ஆகஸ்ட் 07 புதன்கிழமை அன்று ஸ்ரீலங்காவில் இருந்து அன்புத் தம்பி T S A அபுதாஹிர் அவர்கள் காயல்பட்டணத்தில் நோன்பு பெருநாள் என்ற தலைப்பில் அவருடைய கருத்தை மிகவும் தெளிவாக அறிவித்து இருக்கிறார். அது மிகவும் சரி.
காரணம் ஒரு ஊரில் மூன்று நாட்கள் பெருநாள் என்றால் எந்த பெருநாளில் கலந்து கொள்வது என்று தெரியாமல் வெளியூரில் இருந்தும், என்னைப் போன்று வெளிநாட்டில் இருந்தும் பெருநாளை கொண்டாடுவதற்காக ஊர் வரும் காயலர்கள் மற்றும் வெளியூர் நண்பர்கள், மிகவும் யோசிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஆகிவிட்டது.
ஒரு ஊரில் ஒரு பெருநாள் என்பது மட்டுமே சரியாக இருக்க முடியும். ஒரு சிலருடைய தவறுகளினால் ஊரில் மூன்று பெருநாட்கள் என்பது சர்வ சாதரணமாக வழக்கத்தில் நடந்து வருகிறது. இது மிகவும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
இந்த நிலை தொடருமானால் இது சரியா தவறா என்று அறிய முடியாத சிறு குழந்தைகளுக்கும் இளைய தலைமுறையினருக்கும் வருங்கால சந்ததியினருக்கும் மிகவும் குழப்பான ஒரு சூழ்நிலைதான் ஏற்படும்.
ஆதலால் இனிமேலாவது இந்த நிலை தொடராமல் ஒரு ஊரில் ஒரு பெருநாள்தான் என்ற நிலை ஏற்பட வேண்டும். ஊரில் உள்ள உலமாக்களும், ஊர் பெரியவர்களும் ஒன்று கூடி ஊரின் ஒற்றுமை, சகோதரத்துவம் கருதி நல்ல ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எனது ஆவல்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு துணைபுரிவானாக ஆமீன். அணைத்து காயலர்களுக்கும் ஈது பெருநாள் வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross