Re:... posted byசாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்)[10 August 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 29355
கட்டுரையாளரின் தொடர்ச்சியான கட்டுரைகளில் ஸவூதி ஆதரவு பரப்புரை வலுவாக இருக்கின்றது.
குடிமக்களின் துயரை துடைப்பது ஒரு நாட்டை ஆளும் அரசின் அடிப்படை கடமையாகும். அதில் விளம்பரப்படுத்துவதற்கு என்ன இருக்கின்றது ?
அது சரி ! இத்தனை வறுமையோடு சேரி பகுதிகளில் வாடும் மக்களின் துயர் இவ்வளவு நாட்கள் நீடிப்பதற்கு யார் காரணம் ? ஸவூதி அரசு என்ன செய்து கொண்டிருந்தது ? ஸவூதி இளவரசருக்கு இப்போதுதான் வசதி வந்ததா ? 81000 ரூபாய்கள் மதிப்புள்ள ரியாலை கொடுத்தால் அவர்களின் மொத்த பிரச்சினையும் தீர்ந்து விடுமா ?
முஸ்லிம் நாடுகளில் ஜகாத்தை முறையான அரசு பொறி முறை மூலம் வினியோகிப்பதுதான் முறை. அதை தனி ஆள் வினியோகித்து அதுவே ஊடகங்கள் மூலம் விளம்பரம் பண்ணப்படுவது எந்த வகையில் சேரும் என தெரியவில்லை.
தமிழக ஆட்சியாளர்கள் அள்ளித்தெளிக்கும் இலவசங்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக படவில்லை.
தங்களின் அமெரிக்க யூத விசுவாசம் , சொகுசான கேளிக்கை மிக்க மன்னராட்சி , சன நாயக மறுப்பு , சர்வாதிகாரம் , மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த தொழிலாளிகளை சுரண்டுவது போன்ற அபத்தங்களை மறைக்க இம்மாதிரி விளம்பர உத்திகள் அவர்களுக்கு தேவைப்படுகின்றது.
எகிப்தின் இஸ்லாமிய ஆட்சியாளரான முர்ஸீ அவர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை கண்டித்து பேசிய உலமா ஒருவருக்கு 06 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதும் இதே ஸவூதியில்தான்.
அரபு நாடுகளை உலுக்கி வரும் அரபு வசந்தம் என்ற புரட்சி ஸவூதியிலும் பற்றி படராமல் இருக்க இது போன்ற சலுகைகள் அள்ளித் தெளிக்கப் படுகின்றன.
கியூபா, வெனிசுவேலா போன்ற மக்களாட்சி நாடுகளில் கல்வி , பொது சுகாதாரம் போன்ற பல விடயங்கள் முற்றிலும் இலவசமாக மக்களுக்கு விளம்பரமின்றி வழங்கப்படுகின்றன.
மறைந்த வெனிசுவேலா அதிபர் சாவேஸ் நாட்டின் எண்ணெய் வளத்தில் கிடைக்கும் லாபத்தின் பெரும் விகிதத்தை கொள்ளைக்கார கார்ப்பரேட்டுகளிடமிருந்து பிடுங்கி மக்களுக்கே கிடைக்க வழி வகை செய்தார். தன் இறுதி மூச்சு வரை அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் வாழ்ந்தார்.
இஸ்லாமிய சட்டங்களின் ஆள்வதாக பீற்றிக் கொள்ளும் ஸவூதி போன்ற முடியாட்சி நாட்டில் இவை கனவில் கூட சாத்தியமாகுமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross