Re:...சிறந்த வழிகாட்டி posted bymackie noohuthambi (kayalpatnam)[11 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29391
காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த காயலர் ஒன்று கூடல் நிகழ்ச்சியே ஒரு வழிகாட்டும் நிகழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன்.
நமதூரிலும் இத்தகைய ஒன்று கூடலை நமதூர் கடற்கரையிலேயே ஏற்பாடு செய்யலாம், மண்டபங்கள் பிரச்சினை இல்லை, இட பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை மற்றும் கழிவறை பிரச்சினையும் கூட இல்லை. ஒரு சில் மணி நேரங்கள் கூடி கலைய இப்போது நமதூர் மக்கள் கடற்கரையில் கூட்டம் கூட்டமாக கூடி இருந்ததை இணையதளங்கள் படம் பிடித்து காட்டின.
KCGC யின் புதிய அணுகுமுறை நல்ல முன்னுதாரணம். ஊர் விஷயங்களை இப்படி ஒன்று கூடல் மூலம் பலதரப்பட்ட மக்களும் கூடி கலந்தாலோசிக்க இந்த கடற்கரை கூட்டம் ஒரு நல்ல ஏற்பாடு. எனவே, காயல்பட்டினதிலும் இப்படி ஒரு கூட்டத்தை KCGC கூட்டி, இதை மற்றவர்களும் பின்பற்ற செய்யலாம்.
ஒரே பெருநாளை மூன்று பெருநாட்களாக தனி தனியாக கொண்டாடி நமது ஒற்றுமையை உலக்குக்கு அடையாளம் காட்ட நமது கடற்கரையை பயன்படுத்துகிறோம். நாம் ஒன்றுபட்டு நல்ல முடிவுகள் எடுக்க மட்டும் வேறு இடங்களை தேர்ந்து எடுக்கிறோம். என்ன ஒரு வித்தியாசமான அணுகுமுறை, JUST THE OPPOSITE! ஆச்சரியமாக இல்லை. எனவே, KCGC சிறந்த வழியை நமக்கு காட்டியுள்ளது.
வாருங்கள் இனி நமது கடற்கரை நமதூர் மக்களின் கனவுகளை நனவாக்க வியூகம் வகுக்கும் தலைமை செயலகமாக மாற்றுவோம். புதிய வானம் புதிய பூமி, பரந்த மணல் திடல். ஆழமான கடலின் ஆர்ப்பரிக்கும் அலை ஓசை, பொன் மாலை பொழுது. நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது. .
"இங்கே, ஏறல் எழுத்திலும் இறை மறை இருக்கும், அலைகளின் வாயும் ஹதீதுகள் பேசும்" என்று கவிக்கோ நமது கடற்கரையை பற்றி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. . .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross