Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[15 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29497
ஒரு புறாவும் அதன் தாயும் ஒரு கோபுரத்துக்கு மேலே பறந்து சென்று நின்றன.அது ஒரு கோயில் கோபுரம். புறா கேட்டது அதன் தாயிடம், கீழே இருப்பவர்கள் யார்? தாய்ப்புறா சொன்னது அவர்கள் ஹிந்துக்கள். அடுத்தநாள் அவை பறந்து ஒரு உயரமான இடத்தில நின்றன. அப்போதும் அதன் கீழே பலர் நின்றனர். இவர்கள் யார் என்று கேட்டது புறா. தாய் புறா சொன்னது இவர்கள் கிறிஸ்தவர்கள். அடுத்தநாள் ஒரு மினாரா மேலே அந்த புறாக்கள் பறந்து வந்து நின்றன. இப்போதும் கீழே ஒரு கூட்டம் இருந்தது. புறா வழக்கமான கேள்வியை கேட்டது. தாய் புறா சொன்னது இவர்கள் முஸ்லிம்கள்.
ஐந்து அறிவு உள்ள அந்த புறா தன் தாயிடம் கேட்டது, " நாம் எங்கே பறந்து போய் நின்றாலும் நம்மை புறா என்றுதானே அழைக்கிறார்கள், ஆனால் இந்த மனிதர்களை மட்டும் ஏன் ஹிந்துக்கள் என்றும் கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் அழைக்கிறார்கள், இவர்கள் எல்லோரும் மனிதர்கள்தானே, மனிதர்கள் என்றே அழைக்கலாமே?". தாய் புறா இப்போது அமைதியாக சொன்னது, "அதனால்தான் நாம் மேலே இருக்கிறோம், அவர்கள் கீழே இருக்கிறார்கள்".
KVAT அறக்கட்டளை நிகழ்ச்சி நடக்கும்போது நான் தொலைக்காட்சியிலே இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது இந்துக்களில்தான் எத்தனை பிரிவு, கிறிஸ்தவர்களில்தான் எத்தனை பிரிவு, முஸ்லிம்களில்தான் எத்தனை பிரிவு?
மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் நம் இரு கண்களாக பேணிக் காக்க இந்த சுதந்திர தின நன்னாளில் சபதம் ஏற்போம். KVAT அறக்கட்டளை அந்த வகையில் நமதூருக்கு முன்னோடியாய் திகழ வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross