செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உறுப்பினர் பெருமக்களே...! அடுத்த கூட்டத்தில் என் கருத்தை யோசனைக்கு எடுங்கள்...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[18 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29548
சகோதரர் அப்துல் வாஹிது அவர்களே... நகரமன்றத்தின் உறுப்பினர்கள் பெருமக்களே...! குறிப்பாக நகர பெருமக்களே..!
தலைவியை தங்கள் பள்ளிவாசலுக்கு அழைத்து அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இது நிச்சயமாக ஒரு நல்ல முன்னுதாரணம். ஊர் நலத்தில் அக்கறையுள்ள ஜமாத்தினர்களும் இந்த முன்னுதாரனத்தை கடைபிடிப்பார்கள் என்று நம்புவோமாக... தாயும் பள்ளி ஜமாத்தினர் தங்கள் பங்கை செய்துவிட்டனர்.. (C - P)
நகர் நலனுக்கு எதிராக (உதாரனத்திற்க்கு பெரிய நெசவுத் தெரு புதிய சாலையின்றி குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் படும் அவதிகள்) தொடர்ந்து நடந்து வரும் இந்த வெளிநடப்பு விபரங்களை மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி ஜமாஅதினர்களும் அதன் கிளை ரெட் ஸ்டார் சங்கத்திரனர்களும் மற்றும் புதுப்பள்ளி அதன் கிளை ரிஜிவான் சங்கத்திரனர்களும் தாயும் பள்ளி ஜமாத்தினர் தலைவியை அழைத்து விளக்கம் பெற்றது போல் மேலே குறிப்பிட்ட ஜமாத்தினர்கள் விரைவில் நகர்மன்ற தலைவியை அழைத்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது....! இன்ஷா அல்லாஹ் விரைவில் அதன் செய்திகளை விரைவில் எதிர்ப்பர்போம்... இறைவன் நாடினால்...
தலைவியை பதவி நீக்கம் செய்யக் கோரி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு தாங்கள் (உறுப்பினர்கள்) கடிதம் அளித்துள்ளதாக கூறும் உறுப்பினர் பெருமக்களே...! நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தனது தனிபட்ட முறையில் இந்த தலைவியை பதவி நீக்கம் செய்ய முடியாது தமிழக முதல்வரின் உத்தரவு வேண்டும்... அந்த உத்தரவை இப்போதைக்கு தாங்கள் எதிர்பார்ப்பது உங்களின் அறியாமையே உணர முடிகின்றது...! அடுத்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் MP தேர்தலை திருச்செந்தூர் தொகுதியில் என்ன செய்தால் என்ன நடக்கும்...? என்ற நிலவரங்களை உளவு பிரிவு மிக தெளிவாக காயல்பட்டினத்தின் நாடித்துடிப்பை (நகர்மன்ற தலைவியின் வெற்றி வாக்குகள் எத்தனை.. அவர்களுக்கான மக்கள் ஆதரவு என்ன) அனைத்தையும் தமிழக முதல்வருக்கு உளவு பிரிவு மிக தெளிவாக தெரியபடுத்திய வண்ணம் உள்ளன...! ஆகையால் உறுப்பினர் பெருமக்களே...! இந்த தலைவியின் பதவி நீக்கம் சம்பந்தமான புகார் எல்லாம் நடக்கவிருக்கும் MP தேர்தல் முடிந்த பின்பு நீங்கள் வைத்து கொள்ளலாமே...?
இப்போதைக்கு நகரின் நன்மைக்கு காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்தல், குடிநீர் வால்வு தொட்டிகளுக்கு உதிரி பாகங்கள் கொள்முதல் செய்தல், தெரு விளக்கு பராமரிப்பு, நகராட்சி பேருந்து நிலைய கழிப்பறை ஏலம், புறநகர் மக்களின் பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக புதிய சாலைகள் அமைத்தல், நகரின் பல பகுதிகளில் சேதமுற்ற நிலையிலுள்ள சாலைகளை செப்பணிடல், மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்படாமலேயே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய முக்கிய செயல்திட்டங்கள் குறித்து நகர்மன்றத்தில் தலைவியுடன் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள்...!
உறுப்பினர் பெருமக்களே...! அடுத்த கூட்டத்தில் என் கருத்தை யோசனைக்கு எடுங்கள்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross