தாயீக்கள் மறைந்தாலும் அவர்கள் விதைத்த விதை தரணியெங்கும் பரவட்டும்! posted bykhatheeb Muhammad Muhyiddeen (Doha)[19 August 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29561
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் முந்தைய பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் ஈமானை ஏற்றுக் கொண்டு, பொருந்திக் கொண்டு, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!
அன்னார் தமது வாழ்வின் இறுதிப் பகுதியில் தெரிந்தெடுத்த / முன்னெடுத்த இஸ்லாமிய நல்வழிப்பாதையின் ஒளி - நம் தமிழ் மண்ணில் இன்னும் இஸ்லாமிய நறுமணத்தைத் தம்மில் தழுவிக் கொள்ளாத எண்ணற்ற இறை நிராகரிப்பாளர்களான நாத்திகர்களுக்கும், மறையாளர்களான கிறித்தவர்களுக்கும, முஷ்ரிகீன்களான பிற மதத்தவருக்கும் முன்மாதிரியாகத் திகழட்டும்! இஸ்லாம் இந்நாட்டின் இறுதிக் குடிமகன் வரை, அதனுடைய தூய வழியில் சென்றடையட்டும்! தாயீக்கள் மறைந்தாலும் அவர்கள் விதைத்த விதை தரணியெங்கும் பரவட்டும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross