Re:...அப்துல் வதூத் ஆலிம் அவர்களே ஒரு ஆலிம்தானே posted bymackie noohuthambi (kayalpatnam)[21 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29616
அப்துல் வதூத் ஆலிம் அவர்களும் ஒரு ஆலிம்தானே?
உலமாக்களுக்கு அழைப்பு விடுப்பதே முறை. அதுவும் நமதூரில் உள்ள எல்லா அரபி மதரசாக்களுக்கும் பள்ளி வாசல்களுக்கும் நேரில் சென்று முதவல்லிகளை சந்தித்து பேசி அவர்களையும் இந்த விவாத மேடையில் வீற்றிருக்க செய்து, அவரவர்கள் கருத்துக்களையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர ஹிஜ்ரா கமிட்டி முன்வரவேண்டும்.
அபூ தாவூதில் ஒரு செய்தி வருகிறது. ஒரு விஷயம் சரியானதாக இருந்தாலும் சரிதான், அதற்காக விவாதம் செய்யாமல் விலகி இருப்பவனுக்கு நான் சொர்கத்தின் ஒரு பகுதியில் ஓர் மாளிகை கட்டிகொடுக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்.
இது எல்லா ஆலிம்களுக்கும் தெரிந்த செய்திதான். என்ன செய்வது, காலத்தின் கட்டாயம். விவாதம் புரிந்துகொண்டே இருந்தால் எப்போது அமல் செய்வது?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross