ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமையன்று பிறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில், “ஓர் இறை - ஓர் மறை - ஓர் பிறை” எனும் தலைப்பில், இம்மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை மாலை 04.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை, காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
ஓர் இறை! ஓர் மறை!! ஒரே பிறை!!! ஆனால் முஸ்லிம்களின் பெருநாள் மட்டும் ஏன் மூன்று? என்ற வியப்புக்குறிக்கும்!!! வினாக்குறிக்கும்??? குர்ஆன் சுன்னாவின் ஒளியில் விடை காண்போம்.!
மாற்றங்கள் பல கண்ட, தவறுகள் பல நிறைந்த ஆங்கில நாட்காட்டியை விட இஸ்லாமிய ஹிஜ்hp நாட்காட்டியே பின்பற்ற தகுதி வாய்ந்தது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!
இஸ்லாமிய மாதங்களை சரியாக துவங்கி, சரியான தேதிகளில் நமது அமல்களை செய்து மகிழவும் ஒன்றுபடுவோம்! ஒன்றிணைந்தே செயல்படுவோம்!!
ஒரு மாதத்தின் முதல் நாளுக்குரிய பிறையை எந்த நாளில் எந்த திசையில் பார்க்க வேண்டும்? என்பன போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு மார்க்கம் கூறும் தெளிவை அறிவோம்!
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட அமல்களை செய்வதற்கு பிறந்த பிறையை புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டுமா? என்பதை குர்ஆன் சுன்னா ஒளியில் அறிந்துகொள்வோம்.
உலக முஸ்லிம்கள் ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக்கிழமை என்ற ஒரே நாளுக்குள் தொழுவதைப் போல, பொருநாள் தொழுகையையும் பெருநாள் தினத்தில் ஒரே நாளுக்குள் தொழமுடியும் என்பதை தெளிவாக புரிவோம்.
உலமா பெருமக்களே! உயர்ந்த சிந்தனையாளர்களே! பாசமிகு தாய்மார்களே! இளைஞர்களே! யுவதிகளே!
பிறை சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த தீர்வுகளை நேரடியாக கேட்டு தெளிவு பெறவும், பிறை சார்ந்த அனைத்து வினாக்களுக்கும் விடை காணவும் கருத்தரங்கத்திற்கு தவறாது வருகை தந்து பயனடைய வேண்டுகிறோம்.
வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
தொடர்புக்கு: 99408 11119, 94471 81884, 94440 43264, 99943 44292, 98421 85917
கருத்தரங்க நிகழ்ச்சியையொட்டி, அன்று காலை 10.00 மணிக்கு சிறப்பு அமர்வும் நடைபெறவுள்ளது. வானவியலில் ஆர்வமுள்ளோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வமர்வில் கலந்துகொள்ள மேற்கண்ட தொடர்பு எண்களில் முன்பதிவு செய்வோருக்காக, மதிய உணவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இவ்வாறு, ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டது @ 22:57 / 20.08.2013] |