காயல்பட்டினம் வருகை தந்த - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத்தலைவருக்கு, கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் - லால்பேட்டையைச் சேர்ந்த மவ்லவீ ஷஃபீக்குர்ரஹ்மான் மன்பஈ என்ற தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான், நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக, இம்மாதம் 17ஆம் தேதி சனிக்கிழமையன்று காயல்பட்டினம் வருகை தந்தார்.
இதனையொட்டி, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள - கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு, மாநில துணைத்தலைவரை வரவேற்றுப் பேசினர். பின்னர், தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் ஏற்புரையாற்றினார்.
நிறைவில், கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் அதன் நிர்வாகிகள் - தளபதி ஷஃபீக்குர்ரஹ்மானுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத் |