காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியர், பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, சாதனைகள் புரிந்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
CROSA போட்டி:
தூத்துக்குடி ஹோலி க்ராஸ் மேனிலைப்பள்ளியில், இம்மாதம் 16, 17 தேதிகளில், CROSA Competition என்ற பெயரில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் எம் பள்ளியின் மாணவியர் பங்கேற்று சாதனைகள் புரிந்துள்ளனர். எம் பள்ளியின் 09ஆம் வகுப்பு மாணவி ஸிராஜ் முவஃப்பிகா - இளம் விஞ்ஞானி (ஜூனியர்) போட்டியில் முதல் பரிசும்,
10ஆம் வகுப்பு மாணவி பி.எம்.ஏ.சாரா - Creative Writing போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்று சாதனைகள் புரிந்துள்ளனர்.
போட்டிகள் அனைத்திலும் பங்கேற்ற எம் பள்ளியின் மாணவியர் அனைவரும், பங்கேற்புச் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
Romperlo Expo ’13:
தூத்துக்குடி - முள்ளக்காடு சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில், Romperlo Expo ’13 என்ற தலைப்பில், இம்மாதம் 01, 02, 03 தேதிகளில் - அக்கல்லூரி வளாகத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், எம் பள்ளியின்
08ஆம் வகுப்பு மாணவி கே.ஃபரீதா - ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசும்,
11ஆம் வகுப்பு மாணவி ஏ.எஸ்.அஹ்மத் முன்ஷிரா - நினைவாற்றல் போட்டியில் இரண்டாம் பரிசும், பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர்.
அறிவியல் ஊக்க விருது:
மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற - மாவட்ட அளவிலான அறிவியல் செயல்திட்டப் போட்டியில், எம் பள்ளியின் 09ஆம் வகுப்பு மாணவி எச்.ஃபாத்திமா ஸமீரா கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று, மாநில அளவிலான அறிவியல் செயல்திட்டப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் ஊக்க முகாம்:
இம்மாதம் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, திருநெல்வேலி - மேலத்தெடியூரிலுள்ள பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் அறிவியல் ஊக்க முகாமில் கலந்துகொள்ள, எம் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவியரான
ஏ.எஸ்.அஹ்மத் முன்ஷிரா,
எஸ்.எச்.ஜன்னத் முஃமினா,
எம்.சங்கீதா,
எஸ்.எச்.முஷ்ஃபிகா
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சாதனை புரிந்த மாணவியர் அனைவரையும், பள்ளியின் நிர்வாகிகள், தலைமையாசிரியை உள்ளிட்ட ஆசிரியையர் பாராட்டினர்.
இவ்வாறு, காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமைாயிரியை மீனா சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |