தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம், 08.07.2013 திங்கட்கிழமை காலை 12.30 மணியளவில், தூத்துக்குடி நகரில் நடைபெற்றது. கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி முன்னிலை வகித்தார்.
திமுக காயல்பட்டினம் நகர கிளை இளைஞரணி அமைப்பாளர் காதர் உட்பட - மாவட்டத்தின் அனைத்து கிளைகளைச் சேர்ந்த இளைஞரணி அமைப்பாளர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில பொருளாளரும், மாநில இளைஞரணி அமைப்பாளருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கலந்தாலோசனை நடத்தினார்.
மாவட்டம் முழுவதும், கட்சிக்கு அதிகளவில் உறுப்பினர்களை இணைக்க வேண்டுமென்றும், அவ்வப்போது நடைபெறும் கூட்டங்களை மினிட் புத்தகத்தில் முறைப்படி பதிவு செய்து பராமரிக்க வேண்டுமென்றும் அவர் பேசினார்.
பின்னர், மாவட்டத்தின் அனைத்து கிளைகளது மினிட் புத்தகங்களைப் பார்வையிட்டு ஒப்புதலளித்த அவர், இளைஞரணி அமைப்பாளர்களுக்கான அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

 |