ரமழான் மாதம் நிறைவுற்று, ஷவ்வால் முதல் 6 நாட்களும் கடந்து சென்றுள்ளதையடுத்து, நடப்பாண்டின் நோன்பு பருவம் முடிவுக்கு வந்துள்ளது.
ஆண்டுதோறும், ஷவ்வால் 06ஆம் நாளைக் கடந்தவுடன், காயல்பட்டினம் நகரம் திருமண நிகழ்ச்சிகளால் களை கட்டும். நடப்பாண்டிலும், இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்ட தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இப்படிப்பட்ட திருமணங்களில் இடம்பெறும் விருந்திற்காக அறுக்கப்படும் ஆடுகளின் தலை, கால், குடல் ஆகியவற்றை நகரின் பிரதான சாலைகளின் சந்திப்புகளில் வைத்து விற்பனை செய்யப்படுவது வழமை.
ஆனால், தற்போது அவ்வழமையில் சிறிய மாற்றம் காணப்பட்டுள்ளது. தற்போது கை வண்டிகளில் வைத்து தெருக்களில் வீடு வீடாக கூவி விற்பது புதிதாகக் காணக் கிடைத்தது. தலை - கால்களை, வீட்டிற்கு முன் வைத்து வெட்டி, கழிவுகள் நீக்கி விற்பனை செய்யும் காட்சியைத்தான் படங்களில் காண்கிறீர்கள்.
குடல் 100 ருபாய், தலை 1௦௦ ருபாய், கால் (நான்கு) 1௦௦ ரூபாய், மொத்தமாக செட் ஒன்றுக்கு 250 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
மதியம் பன்னிரெண்டு மணியைத் தாண்டிவிட்டதால் தலை முப்பது ரூபாய்க்கும், கால் (நான்கு) முப்பது ரூபாய்க்கும் ”ஆஃபர் சேல்” முறையில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
|