Don't hate what you don't understand posted byAbdul Wahid S. (kayalpattinam)[22 August 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 29630
அஸ்ஸலாம் அழைக்கும் (வரஹ்)
பிறை சம்பந்தமாக கேள்விகள் எழுப்பிய சகோதரர்களில் சிலர் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட சில ஹதீஸ்களை மட்டுமே அடிப்படியாகக் கொண்டு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மற்றும் சிலர் விஞ்ஞானம் என்று தாங்கள் நம்பிய (அறிந்த) கருத்தின் அடிப்படையில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இன்ஷா-அல்லாஹ் நடவிருக்கும் கருத்தரங்கில் குர்-ஆன் மற்றும் பலமான ஹதீஸ்கள் அடிப்படையில் இவை அனைத்திற்கும் விளக்கம் கிடைக்கும்.
எவரும் பிறை(கள்) பற்றி பல இடங்களில் குர்-ஆன் கூறுகின்ற வசனங்களை குறிப்பிட்டு உங்கள் கொள்கை குர்-ஆனுக்கு மாறுபட்டிருக்கிறது என்று குற்றம் சாட்ட முன்வரவில்லை. கேள்வியும் எழுப்பவில்லை.
"இந்த ஹிஜ்ரா கமிட்டி சார்பில் கலந்து கொள்பவர்களில் நன்கு அரபி தெரிந்த ஆலிம் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை அறிய தரவும்" அப்துல் வதூத் (Copy & paste)
ஆலிம் அப்துல் வதூத் அவர்களுக்கு:
இன்ஷா-அல்லாஹ் இன்னும் ஓரிரு நாட்களில் நிகழ்ச் நிரல்கள் வெளியாகும். அதில் யார் யார் கருத்தரங்கில் பேசயிருக்கிறார்கள் அவர்களின் தகுதி என்ன விபரமும் இருக்கும்.
Hijiri Committe Google Mail Group மூலம் தங்களுடைய அரபி புலமையை ஓரளவு தெரிந்துகொண்டவன் என்ற முறையில் தங்களுக்கு அறியத் தருவது, மதரஸாக்கள் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ள நிறுவனங்களில் 7 வருடங்கள் படித்தவர்களே ஆலிம்கள், அவர்களுக்கு நன்கு அரபி மொழி தெரிந்திருக்கும். அவர்கள் மட்டுமே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதற்கு தகுதியானவர்கள். மற்றவர்களெல்லாம் அவாம்கள், மார்க்கத்தை பேசுவதற்கு எள்முனையளவும் தகுதியற்றவர்கள் என்ற புரையோடிப்போன சித்தாந்தத்தின் தாக்கம் தங்கள் கேள்வியில் வெளிப்படுகிறது.
பிறை விஷயம் பற்றி பேசுவதற்கு அரபியில் அதிக புலமைபெற்ற ஆலிமாக இருத்தல் மட்டும் போதாது, அந்த ஆலிம்களுக்கு பிறை பற்றிய விஞ்ஞான ஞனமும் அவசியம்.
சில நாட்களுக்கு முன் நம்மை விட்டும் பிரிந்த மூத்த சகோ.,. அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) 7 வருசங்கள் மதரசாவில் பயின்று பட்டம் பெற்ற ஆலிம்கள் செம்மையாக செய்ய முடியாத வேலையை திறம்பட செய்தவர் . இவர் எந்த மத்ரசாவிலும் பயலவில்லை அவருக்கு அரபி மொழியும் தெரியாது. இருந்த போதிலும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து அழைக்கும் பணியில் தலை சிறந்து விளங்கினார்.
1) நடைபெறவிருப்பது கருத்தரங்கம். விவாத அரங்கம் அல்ல.
2)அனைத்துப் பிறைகளையும் பல வருடங்களாக தொடர்ந்து அவதானித்து வந்ததின் அடிப்படையிலும், துல்லியமாக விஞ்ஞானத்தின் உதவி கொண்டு, குர்ஆன் சுன்னாவின் வழியில்தான் இந்த ஹிஜ்ரி காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். ஹிஜ்ரி காலண்டர் நீங்கள் நினைக்கின்ற மாதிரி யூகத்தின் அடிப்படையிலோ, கணித்தல் அடிப்படையிலோ அல்லது Arithmetic அடிப்படையிலோ தயாரிக்கப்பட்டது அல்ல. மாறாக விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்ட விஞ்ஞான கணக்கிடுதல் (Scientifically proven calculation) அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
For instance:
1) இந்த விஞ்ஞான கணக்கிடுதல் முறையில்தான் இன்று உலகமுழுவதும் முஸ்லிம்கள் 5 வேளை தொழுகை நேரங்களை கடைபிடித்து வருகின்றனர்.
2) இந்த விஞ்ஞான கணக்கிடத்தல் முறையில்தான் சூரிய - சந்திர கிரகணங்கள் ஏற்படுவதை முஸ்லிம்கள் முற்கூட்டிய அறிந்து வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான கிரகனத் தொழுகைக்கு தங்களை தயார்படுத்துகின்றனர்.
3) இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் (கடிகாரத்தைப் பார்த்து) நோன்பு திறக்கப் படுகிறது. (எந்த முஅத்தினும் சூரியன் மறைவதை கண்ணால் பார்த்து "ம.:ரிப் பாங்கு" சொல்வதில்லை).
இன்னும் பல உதாரணங்களை சொல்லலாம். தங்களுக்கு இது போதுமென்று எண்ணுகிறேன்..மேலதிக விபரங்களுக்கு www.mooncalendar.in என்ற இணையதளத்தை தவறாது பார்க்கவும்.
" .......சர்வதேச பிறை என்பவர்கள் கூட சரி இல்லை. உலக அமைப்பு படி நமதூரை கணக்கில் கொண்டால், சவுதியில் தான் முதலில் பிறை தோன்றும்,......." posted by Farook (Saduiarabia)
(Copy & Paste)
சகோ., Farook (Saduiarabia) அவர்களுக்கு:
பிறை பற்றிய தங்களுடைய விஞ்ஞான அறிவு நிச்சயமாக வாசகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எவருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
தாங்கள் குறிப்பிட்ட மேகமூட்ட ஹதீஸ்களையும் மறுப்பதற்கில்லை. அனால் தாங்கள் மொழியாக்கம் செய்தது போன்று அந்த ஹதீஸ்கள் எதிலும் "மேகமூட்டம்" என்பதைக் குறிக்கும் அரபி சொல் இடம் பெறவில்லை. மாறாக " உங்களுக்கு மறைக்கப்பட்டால் " என்று பொருள் படும்படியான அரபி சொல்லே இடம் பெற்றுள்ளது.
மேலும் உங்கள் புரிந்துகொள்ளும் தன்மையில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் கீழ்க்கண்ட ஹதீஸ் படி (புஹாரி:1854) வானத்தைப் பார்த்து சூரியன் அடைந்துவிட்டதை கண்ணால் கண்ட பிறகுதான் நோன்பு திறக்க வேண்டும்.
நீங்கள் அனைவரும் சுற்றிக் காட்டிய மேகமூட்ட ஹதீஸ்களில் "பிறையை கண்டால்" என்ற இடத்தில் "ரூயத்" என்ற அரபி சொல்தான் இடம்பெற்றுள்ளது. அதே "ரூயத்" என்ற சொல்தான் மேற்கண்ட நான் குறிப்பிட்ட ஹதீஸிலும் (புஹாரி 1854) இடம்பெற்றுள்ளது.
உங்களில் எத்தனை பேர் சூரியன் அஸ்தமித்ததைக் கண்ணால் கண்ட பிறகு நோன்பு திறக்குகிறீர்கள்?.
மேலதிக விபரங்களுக்கு (சகோ., தேக் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும்):
இந்த கருத்தரங்கம் பற்றிய செய்தி இந்த வெளியீட்டில் மிகத்தெளிவாக சொல்லப்பட்ட செய்தியை உங்களுக்காக மீண்டும் வெட்டி ஒட்டியிருக்கிறேன்.
"பிறை சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த தீர்வுகளை நேரடியாக கேட்டு தெளிவு பெறவும், பிறை சார்ந்த அனைத்து வினாக்களுக்கும் விடை காணவும் கருத்தரங்கத்திற்கு தவறாது வருகை தந்து பயனடைய வேண்டுகிறோம்". (Copy & Paste )
ஆதலால் எங்கு வந்து என்ன கேள்வி (கள்) கேட்க வேண்டுமோ அங்கு வந்து கேள்வி (களை) கேட்கவும்.
வெளிநாட்டில் அல்லது வெளியூரில் வசிக்கும் சகோதர, சகோதரிகள் தங்கள் நண்பர்களின் மூலம் தங்களின் கேள்வி(களை) எத்திவைத்து இன்ஷா-அல்லாஹ் தக்க பதில் (களைப்) பெறலாம்.
------------------------------------------------
இதுவரையில் தான் கேள்விபடாத செய்தி அல்லது விஷயம் என்பதற்காக அந்த செய்தியை மறுப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உலகில் யாராலும் பதில் (விடை தர) இயலாது.
நாங்கள் அறிந்துகொண்டது/ புரிந்துகொண்டது மட்டும்தான் சரி. நாங்கள் அறியாத விசயங்கள் தவறு என்று அடம்பிடிப்பவர்கள் தூங்குவது போன்று நடிப்பவர்களுக்குச் சமம். அவர்களை தட்டி எழுப்ப முடியாது.
"It's easy to hate what we do not understand". In other words, "Don't hate what you don't understand".
காலையில் கிழக்கே உதிக்கும் சந்திரனை அது மறையும் தருவாயில் அந்தி சாயும் நேரத்தில் மேற்கே பார்த்து மறுநாள் நோன்பு நோற்கும் நமக்குள் (இந்த கருத்தரங்கம் மூலம் இறைவன் நாடினால்) ஒற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது என்று எண்ணுவோர் தவறாமல் கலந்துகொள்ளவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross