பிறை கருத்தரங்கம்! posted bySalai.Mohamed Mohideen (Bangalore)[24 August 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 29649
மார்க்க அறிஞர்களையும் படித்த மேதைகளையும் உள்ளடக்கிய Fiqh Council of North America [FCNA] இவ்விடயத்தை (ஹிஜ்ரா) பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து ஏற்கனவே இதனை அங்கீகரித்து வட அமெரிக்காவில் பல பள்ளிகளில் நடைமுறையும் படுத்தி விட்டார்கள். இதைபோன்று ஒரு சில ஐரோப்பிய நாடுகளும் அங்கீகரித்து விட்டன என்பதனை ஊடங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
நம் இந்திய திரு நாட்டில், மார்க்க விடயத்தை பொறுத்தவரை அது விழிப்புணர்ச்சியாகட்டும் அல்லது குழப்பமா கட்டும் (அவரவர் பார்வையை பொருத்தது) அதன் காலடி எப்பவுமே முதலில் நம் தமிழகத்தில் தான். மற்ற மாநிலங்களில் இது போன்று மார்க்க விழிப்புணர்ச்சியோ கருத்து பரிமாற்றங்களோ நடக்கின்ற மாதிரி அல்லது அதற்க்கான அடிச்சுவடே (?) தெரிய வில்லை.
எது எப்படியோ, தன் பகுத்தறிவை கொண்டு ஒரு விடயம் சரியென்றால் அதனை ஏற்று கொள்ளும் (தவறு என்றால் விலகி நிற்கும்) மன நிலையில் தான் இன்றைய தலைமுறையினர் இருக்கின்றனர்.
ஹிஜ்ரா குழு கடந்த மூன்று வருடங்களாக இதனை நமதூரில் நடைமுறைபடுத்தி வருகின்றார்கள் என்று நினைக்கின்றேன். நம்மில் பலருக்கு ஏன் இந்த சிறு கூட்டம் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் தனியாக பெருநாள் கொண்டாடுகின்றார்கள் என்ற ஐயம் கடந்த சில வருடங்களாக இருந்து வந்துள்ளது. அனேகமாக இந்த பிறை கருத்தரங்கம் லேட்டாக வந்தாலும், நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, நம் புரிந்துனர்தல்களை சரிகாண வழிவகுக்கும் என்று நினைக்கின்றேன். ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாததும் தனிநபர் விருப்பம்.
இக்கருத்தரங்கம், குறிப்பாக உலமா பெருமக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து அவர்களால் அங்கிகரிக்க பட்டு விட்டாலே போதும். ஏனென்றால் நாம் அனைவரும் ஏதோ ஒரு கொள்கையை (ஜமாத்) சார்ந்த உலமா பெருமக்களின் பின்னால் தான் அணிவகுத்து நிற்கின்றோம் ... அதிலும் குறிப்பாக பிறை விடயத்தில்.
ஒற்றுமையை நாடும் நம் அனைவருக்கும் பிறை விடயத்தில் ஒரு தெளிவான பார்வையை வல்ல ரஹ்மான் தருவானாக !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross