Re:...ஒரு இறை ஒரு மறை ஒரு பிறை posted bymackie noohuthambi (kayalpatnam)[25 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29688
மருத்துவர் ஹபீப் முஹம்மது அவர்கள் கேள்வி நேரத்தின் போது, இன்று ஊரில் அதிகம் பேசப்படும்
"ஒரு இறை! ஒரு மறை! ஒரு பிறை! பற்றி உங்கள் கருத்து என்ன" என்று நான் கேட்டபோது, அப்படி ஒரு கேள்வியை யாரும் கேட்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருந்தாரோ என்னவோ உடனடியாக அவரிடமிருந்து வந்த தெளிவான பதில் அதிர வைத்தது.
மக்கள் மத்தியில் ஒரு concensus எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வு வரவேண்டும். இஸ்லாம் விஞ்ஞானத்துக்கு எதிரானதல்ல. ஆனால் இந்த முக்கியமான் உலக முஸ்லிம்கள் சார்ந்த விஷயத்தை முடிவு செய்ய வேண்டியது ஒரு சில உலமாக்கள் அல்ல. ஊர் ஒட்டுமொத்தமாக உள்ள உலமாக்கள் கூடி முடிவு செய்யவேண்டும். அதுவரை காழி சொல்வதையே கேட்க வேண்டும்.
சுன்னத் முக்கியமா உம்மத்தின் ஒற்றுமை முக்கியமா என்றால் ஒற்றுமைதான் முக்கியம் என்று பல உதாரணங்களுடன் விளக்கினார்கள். அந்த நிலை எப்போது வரும் எப்போது பிறை விஷயத்துக்கு முடிவு காண்பது என்று கேட்டபோது, அந்த concensus வரும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை இப்போதைய நிலையே தொடர வேண்டும். இல்லாவிட்டால் வீண் குழப்பம்தான் மிஞ்சும் என்று தெளிவாக சொன்னார்கள்.
புரிந்து கொண்டவர்கள் திருத்தி கொள்வார்கள். வாதம் புரிபவர்கள் சலித்து கொள்வார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross