ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் இன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், கடைப்பள்ளிக்கு எதிரிலுள்ள அதன் அலுவலக வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், “வழிபாடுகளில் நிகழும் குறைபாடுகளும், அவற்றைக் களையும் வழிமுறைகளும்” எனும் தலைப்பில், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை அமைப்பின் துணைத்தலைவரும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநில நிர்வாகியுமான - காயல்பட்டினத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் சிறப்புரையாற்றினார்.
சொற்பொழிவைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி - பதில் நிகழ்ச்சியில், தலைப்பிறை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்துப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் அங்கத்தினர், அபிமானிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்விடத்தின் கீழ்தளத்திலுள்ள வளாகத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஏ.லுக்மான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹபீபுர்ரஹ்மான், எஸ்.எச்.லுத்ஃபீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் உதவி:
K.S.முஹம்மத் ஷுஅய்ப் |