காயல்பட்டினம் வருகை தந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு, நகர முஸ்லிம் லீக் சார்பில், தொடர்வண்டி நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக, செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலமாக, இன்று காலை 07.50 மணியளவில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தை வந்தடைந்தார். அவருடன், கட்சியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீயும் வந்திருந்தார்.
தொடர்வண்டி நிலையத்தில் அவர்களை, கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
கட்சியின் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர கவுரவ ஆலோசகர் ஹாஜி வாவு சித்தீக், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன், மாவட்ட நிர்வாகி ஏ.கே.மஹ்மூது சுலைமான், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயிதேமில்லத் பேரவை காயல்பட்டினம் நகர கிளை அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், மாணவரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர நிர்வாகிகளான எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.எச்.அப்துல் வாஹித், எம்.இசட்.சித்தீக், கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா, பெத்தப்பா சுல்தான், ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், ஹாஜி எஸ்.டி.கமால், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், அரபி ஷாஹுல் ஹமீத் உட்பட பலர் இந்நிகழ்வின்போது பிறைக்கொடியேந்தி, வரவேற்பளித்தனர்.
இன்று காலை 09.30 மணியளவில், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் மைதானத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் அவர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
இன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலமைந்துள்ள - கட்சியின் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முஸ்லிம்களின் திருமண சட்ட நடவடிக்கைகளில் காஜிகளுக்குள்ள அதிகாரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் வழக்குத் தொடர்ந்துள்ளமை, அதற்கெதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராமகோபாலன் அண்மையில் காயல்பட்டினம் நகர் குறித்து தெரிவித்த ஆட்சேபகரமான கருத்துக்களுக்கு மறுப்பளித்தும் அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கவுள்ளார்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |