காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில், இம்மாதம் 22ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, தர்பிய்யா நிகழ்ச்சி நடைபெற்றது.
இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவீ முபாரக் மதனீ - இந்நிகழ்ச்சியை நடத்தினார். இறையச்சம், உளத்தூய்மை, சக மனிதர்களுடன் நடந்துகொள்ளும் முறை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் செய்திருந்தது. |