தூத்துக்குடி கல்வி மாவட்டத்தின் உயர்நிலை, மேனிலை, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கழகத்தின் கூட்டமைப்பின் சார்பில், குடியரசு நாள் மற்றும் பாரதியார் நாள் விளையாட்டுப் போட்டிகள், தண்டுப்பத்து அனிதா குமரன் மேனிலைப்பள்ளியில், இம்மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது.
இப்போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியரும் பங்கேற்றனர். அவர்களுள், 09ஆம் வகுப்பு மாணவி எம்.மஃப்ரூஹா - வட்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடமும், அதே வகுப்பைச் சேர்ந்த ஜமீலா ஜுல்ஃபா - குண்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடமும் பெற்று, பரிக்குரியவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகவலை, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் தெரிவித்துள்ளார். |