அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அறிவியல் கண்காட்சி நடத்தல் உட்பட சில தீர்மானங்கள் அதன் மாதாந்திர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளையின் மாதாந்திர கூட்டம், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அரிமா சங்க நகர தலைவர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் தலைமை தாங்கினார். செயல் செயலர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ‘உயிர் காப்போம்’ திட்டம்:
கடந்த வருடங்களைப் போல இவ்வாண்டும் ‘உயிர் காப்போம்’ திட்டத்தை செயல்படுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - அரிமா ஆளுநர் வருடாந்திர வருகை (GAV) நிகழ்ச்சி:
இவ்வாண்டு அக்டோபர் மாத கடைசி வாரத்தில், அரிமா மாவட்ட ஆளுநர் வருகை நிகழ்ச்சியை (Governor Annual Visitation - GAV) நிகழ்ச்சியை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - அறிவியல் கண்காட்சி:
நகர அரிமா சங்கத்தின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடத்திடுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் உட்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அரிமா நிர்வாக செயலர் இம்ரான் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படம்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன் |