காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் திருக்குர்ஆன் மனனப் பிரிவான ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் - ஹிஜ்ரீ 1434 - 1435க்கான புதிய கல்வியாண்டு (30ஆம் ஆண்டு துவக்க விழா) இன்று காலை 09.30 மணிக்கு முறைப்படி துவங்கியது.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் கவுரவ பேராசிரியரும், இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள ஜாமிஉல் அழ்ஃபர் - சம்மாங்கோட் பள்ளியின் இமாமுமான மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
ஹாஃபிழ் கே.ஏ.ஷாஹுல் ஹமீத் ஃபைஸல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எஸ்.ஏ.அவ்லியா ஸாஹிப் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தலைமையுரையைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ வாழ்த்துரை வழங்கினார்.
ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா, புதிய மாணவர்களுக்கு திருமறை குர்ஆனின் துவக்கப்பாடத்தை ஓதிக்கொடுத்து, அவர்களின் திருக்குர்ஆன் மனனத்தைத் துவக்கி வைத்தார். மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ மத்ரஸா அறிமுகவுரையாற்றினார்.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் பாக்கவீ துஆ பிரார்த்தனை செய்ய, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு முதன்மை ஆசிரியர் மவ்லவீ அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ, ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப், ஹாஃபிழ் கே.எஸ்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
புதிய கல்வியாண்டு துவக்க நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர், மத்ரஸாவில் புதிதாக இணைந்துள்ள மாணவர்கள் மற்றும் ஏற்கனவே திருக்குர்ஆன் மனனம் செய்து வரும் பழைய மாணவர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
புதிய மாணவர்கள்:
பழைய மாணவர்கள்:
(படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!)
தகவல்:
ஹாஃபிழ் K.A.ஷாஹுல் ஹமீத் ஃபைஸல் |