பொதுவாக தொடர்வண்டியில் உள்ள கழிப்பறை சாளரங்களில் (சன்னல்) தடுப்பு சாதனமாக மங்கிய கண்ணாடிதான் {SMOKE GLASS} முழுவதுமாக பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் இம்மாதம் 21ஆம் தேதி புதன்கிழமையன்று திருநெல்வேலி சந்திப்பிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்ட நெல்லை அதிவிரைவு தொடர்வண்டியின் (வண்டி எண்: 12632) S9 பெட்டியில் உள்ள கழிவறை காட்சிகளைப் பாருங்கள்:-
கழிவறையின் சாளரத்தின் மேல் பகுதில் மட்டும் மங்கிய கண்ணாடி தடுப்பு இருந்தது. அதன் கீழ்ப்பகுதியில் கண்ணாடி தடுப்புக்கு மாற்றாக கெட்டி அட்டையை (Hard Board) வைத்து மறைக்கப்பட்டிருந்தது. அந்த கெட்டி அட்டையைக் கூட திருகாணி மூலம் பொருத்தாமல் வெறுமனே செருகி வைத்திருந்தனர்.
பற்றாக்குறைக்கு, கழிவறையின் கதவில் உள்ள அடைப்பான்களுக்கு மாற்றாக கொக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் விளைவாக கதவை அடைத்தாலும் கூட கழிவறை கதவின் கீழ்ப்பகுதி விலகி இருந்தது.
பாதுகாப்பற்ற கழிப்பறை சாளரம், கதவினால் போவோர் வருவோர் அனைவருக்கும் கழிவறையின் உட்புறத்தைக் காணக்கூடிய நிலை இருந்தது. அத்துடன் கழிவறையின் துர்நாற்றமும் பெட்டியின் உட்பகுதி வரை வீசியது.
2. Re:...இந்தியன் ரயில்ல.... இதலாம் சகஜம்பா...??? posted byM.S.ABDULAZEEZ (Guangzhou)[27 August 2013] IP: 14.*.*.* China | Comment Reference Number: 29738
ரயில சரியல்ல இதுல கழிப்பறை என்ன பனும் பாவம்....?
போனமுறை நான் ஊரு வந்து இருந்த போது என் மகளுக்கு ஸ்கூல் விடுமுறை என்பதால் சில இடங்களுக்கு ரயில்லில் செல்ல நேர்ந்தது அதில் கோயம்புத்தூரில் இருந்து நெல்லை வரை ( T T ) டிக்கெட் சரி பார்க்ககூட ஆபிசர் வரல..? booking கம்ப்பாட்ட்மன்ட்ல் கூட வழியில் பலர் வரிசையாக படுத்து இருந்தனர் பெண்கள் இரவில் கழிவறை செல்ல மிக சிரமம் ஏற்பட்டது. இதுல இந்த ரயில் கழிவறைக்கு ஒரு கெடா...???
அட போங்க சார்.... இந்தியன் ரயில் அப்படிதான் இருக்கும். நல்ல வேல போட்டோ கவனமா எடுதிருக்கு கொஞ்சம் full போட்டோ எடுதின்கனா ஒரு மாசத்துக்கு சாப்பிட்ட மனசுவறது.... யப்பப்ப.... அம்புட்டு கப்பு...?
3. பழகி போச்சி... இது என்ன புதுசா...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[27 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29741
இந்திய மக்கள் இந்த மாதிரியான பயணமெல்லாம் பழகி ரெம்ப வருடம் ஆகிவிட்டது...! ஒவ்வொரு மனிதனும் இதை தெரிந்து தான் பயணிக்கிறான் என்ன செய்ய நாட்டின் தலைஎழுத்து அப்படி உள்ளது...!
புதியதாக ரயில்வேயில் ஏதாவது முன்னேற்றம் இருந்தால்.... தெரிந்தால் செய்தியாக தாருங்கள்...! மகிழ்ச்சி பெறலாம்...
5. Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[27 August 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 29746
இது போன்று ரயில் பயணங்களில் ஏற்படும் அசுரியங்களை குறுஞ்செய்தி (sms)மூலம் தெரியப்படுத்தினால் அவை உடனடியாக களையப்படும் என்று southern railway அறிவித்துள்ளது.
அதற்கு செய்ய வேண்டியது
வண்டி எண்
பெட்டி எண்
இருக்கை எண்
ஏற்பட்டிருக்கும் பிரச்சனை (உதாரணமாக: தண்ணீர் இல்லாமை, fan வேலை செய்யாமை,பாத் ரூம் கதவு மூடாமை)
இவைகளை type செய்து
8121281212 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள்.
குறை நிவர்த்தி செய்யப்படும்
6. Re:... posted byIsmail Sufi (Muscat)[27 August 2013] IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29747
அன்புத் தம்பி சாளை பஷீர் அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி மிகவும் தெளிவாக புகைப்பட சான்றுதலுடன் நெல்லை எக்ஸ்பிரஸ் பற்றி அவர் கருத்தை எழுதி இருந்தார்.
இந்த விஷயத்தை சாதரணமாக விட்டுவிடாமல் நான் கீழே குறிபிட்டுள்ள முகவரிக்கு புகார் செய்தால் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
புகார் அனுப்ப வேண்டிய முகவரி:
1) The e-mail address of the Public Grievances Cell is:
ddpg@sr.railnet.gov.in
You can mail your complaint to:
Sri .ARUNKUMAR
CHAIRMAN, Public Grievances
Additional Divisional Manager
Chennai Division, Southern Railway
Divisional Office
Park Town, Chennai - 600 003.
Ph.044-25358131
மேலும் ஜூனியர் விகடன் பத்திரிக்கை ஆபீஸ் முகவரிக்கு அனுப்பினால் பொது மக்கள் நலன் கருதி பிரசுரம் செய்வார்கள். உடனே அனுப்புங்கள்.
2) Junior vikatan
757, Anna Saalai
Chennai 600 002.
வெளிநாட்டில் வாழும் எங்களைப் போன்ற காயலர்களுக்கும் நீங்கள் செய்யும் புகார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross