செய்தி எண் (ID #) 11681 | | |
செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013 |
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு அமெரிக்க அரசாங்கம் அழைப்பு! 3 வார பயணமாக அமெரிக்கா செல்கிறார்!! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 4707 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (29) <> கருத்து பதிவு செய்ய |
|
அமெரிக்க அரசாங்கம் - தனது INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM (IVLP) திட்டத்தின் கீழ் அமெரிக்க பயணம் மேற்கொள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!
அன்புடையீர்,
இறைவனின் சாந்தியும் சமாதானமும், நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அமெரிக்க அரசாங்கம் - தனது INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM (IVLP) என்ற திட்டத்தின் கீழ் - அமெரிக்கா செல்ல எனக்கு அழைப்பு விடுத்துள்ளது என்ற செய்தியினை தங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன், எல்லாப்புகழும் இறைவனுக்கே. இளம் சிறுபான்மை தலைவர்கள் (MINORITY YOUTH LEADERS) என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சிக்காக - இறைவன் நாட்டத்தால் - அக்டோபர் - நவம்பர் மாதங்களில், 3 வாரங்கள், அமெரிக்க அரசாங்கத்தின் முழு ஏற்பாட்டில், அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த அழைப்பு எனக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட கௌரவமாக நான் கருதவில்லை. இது - பிறந்த காயல் மண்ணுக்கும், பாரம்பரியமிக்க நம் ஊரின் அனைத்து சமுதாய மக்களுக்கும் வழங்கப்பட்ட கௌரவமாக நான் கருதுகிறேன்.
எனது இப்பயணம் - எல்லா வகையிலும் பயனுள்ளதாக அமைந்திட வல்ல இறைவனிடம் தாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
இவண்,
ஐ.ஆபிதா சேக்,
நகர்மன்றத் தலைவர்,
காயல்பட்டினம் நகராட்சி.
இவ்வாறு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை - இன்று (ஆகஸ்ட் 17) காலை நடந்த காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசரக்கூட்டத்தில் - உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்களுடன், நகர்மன்றத் தலைவர் பகிர்ந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
|