காயல்பட்டினம் அருகில் லாரியில் கடத்தப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர் உள்பட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விபரம் வருமாறு:-
மாவட்ட வழங்கல் அலுவலர் காமாட்சி கணேஷ் தலைமையில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்வேல், பறக்கும் படை தாசில்தார் வீராசாமி, ஆறுமுகனேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், உணவு கடத்தல் தடுப்பு ஆய்வாளர் முத்து பிரேம்சந்த், உதவி ஆய்வாளர்கள் ஜெயக்குமார் மற்றும் சின்னய்யா ஆகியோர் காயல்பட்டினம் ஓடக்கரை அருகில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை இட்டனர்.
லாரியில் சுமார் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 2.5 டன் ரேஷன் அரிசி 53 மூடைகளில் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி மற்றும் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் அதிலிருந்த லாரி ஓட்டுநர் உட்பட 5 பேரும் ஆறுமுகனேரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆறுமுகனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரான மெஞ்ஞானபுரம் ராமசாமி மகன் மாசானமுத்து (36), அதே பகுதியைச் சேர்ந்த தினியோன் மகன் எபனேசர் (18), மகராஜா மகன் இசக்கிராஜா (20), பரமன்குறிச்சி சக்திவேல் மகன் முத்துக்குமார் (19) மற்றும் சென்னை சுயம்புலிங்கம் மகன் பூவலிங்கம் (26) ஆகியோரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
[படங்கள் இணைக்கப்பட்டன @ 19:57 / 27.08.2013] |