நோன்புப் பருவம் நிறைவுற்றுவிட்டதையடுத்து, காயல்பட்டினத்தில் திருமண நிகழ்ச்சிகள் பரவலாக பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சிகளையொட்டி தொடர்ச்சியாக விருந்துபசரிப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
விருந்துகளில், காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி - இறைச்சி, கத்திரிக்காய் பருப்பு, புளியானம், வெண்சோறு ஆகியன பெரும்பாலும் பரிமாறப்படும்.
காலை மற்றும் மதிய நேரங்களில் விருந்துண்பவர்கள், உண்ட மயக்கத்தின் காரணமாக, அப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களையொட்டியிருக்கும் சதுக்கைகளிலும், சங்கங்களிலும் காற்று வாங்கியவாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அயர்ந்துறங்கி, பின் எழுந்து வீடு செல்வர்.
நேற்று (ஆகஸ்ட் 24) மதியம் 01.00 மணியளவில் காயல்பட்டினம் அப்பா பள்ளி சதுக்கையில் அதுபோன்று காணக்கிடைத்த காட்சிகள்:-
|