நடப்பாண்டு ரமழான் நோன்புப் பருவம் நிறைவுற்று, ஷவ்வால் மாத முதல் ஆறு நாட்களும் கடந்து சென்றுவிட்டதையடுத்து, குற்றால சீசனை அனுபவிக்க காயலர்கள் மீண்டும் குழுக் குழுவாக பயணம் மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.
மக்கள் திரள் வெகுவாகக் குறைந்துள்ள நிலையிலும், குற்றாலத்தில் காயலர்கள், கீழக்கரையைச் சேர்ந்தவர்களை அதிகளவில் காண முடிந்தது.
நேற்று (ஆகஸ்ட் 23) வெள்ளிக்கிழமை மதியம் 01.00 மணியளவில் குற்றாலம் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில், 50க்கும் மேற்பட்ட காயலர்களும், கீழக்கரையைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற பின்னர், அப்பள்ளியின் முகப்பில் பதிவு செய்யப்பட்ட காயலர்களின் குழுப்படக் காட்சி:- (குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!)
காயல்பட்டினத்திலிருந்து குற்றாலத்திற்குச் செல்வோரும், அங்கிருந்து காயல்பட்டினம் திரும்புவோரும், வழியில் பசியாற்றிக்கொள்ள, நெல்லையில் அந்த வழித்தடத்தில் அமைந்துள்ள அன்னபூர்ணா ஹோட்டலுக்குச் செல்வது வழமை. நேற்றிரவு 21.45 மணியளவில் அங்கு பதிவு செய்யப்பட்ட காட்சி:-
கள உதவி:
ஹாஃபிழ் M.A.முஹம்மத் ஃபாயிஸ் |