காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நலச்சங்கம் சார்பில், அந்த மஹல்லா ஜமாஅத்திற்குட்பட்ட சாதனை மாணவ-மாணவியருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
2012-ல் தாயிம் பள்ளி ஜமாஅத், மஜ்லிசுல் கௌது சங்கம் - சீதக்காதி நினைவு நூலக உறுப்பினர்கள் கூடி தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நலச் சங்கம் டீவா (TEWA) அமைப்பை ஏற்படுத்தினார்கள்.
இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாக தாயும்பள்ளி ஜமாத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி படிப்பை தொடர்வதற்காக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது.இந்த அமைப்பின் ஒரு திட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு தேர்வில் தாயும்பள்ளி ஜமாத்தில் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவ/மாணவியருக்கு பரிசளித்து அவர்களை ஊக்குவிப்பது.
அதனடிப்படையில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகைகளை வழங்கும் நிகழ்வு நேற்று (27/08) மாலை மஜ்லிசுல் கௌது சங்கம் - சீதக்காதி நினைவு நூலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு M.A.செய்யது முஹம்மது புஹாரி M.Com., M.Phil., M.Ed., அவர்கள் தலைமை தாங்கினார்கள். நிகழ்வின் துவக்கமாக சகோ.முஹம்மது ஃபஹத் இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து சகோ.செய்யது இஸ்மாயில் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்வின் தொடராக நிகழ்விற்கு தலைமை தாங்கிய சிறப்பு விருந்தினர் ஜனாப்.M.A..செய்யது முஹம்மது புஹாரி M.Com., M.Phil., M.Ed., அவர்கள் தலைமையுரையாற்றினார்கள். இதனையடுத்து பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதிக மதிப்பெண்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை தாயிம்பள்ளியின் தலைவர் ஜனாப்.V.T.வெள்ளைத் தம்பி ஹாஜி, ஜனாப்.மூஸா ஹாஜி உட்பட ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கினார்கள்.
பரிசு பெற்ற மாணவ, மாணவியர் விபரம்:
12-ம் வகுப்பு:
1) N.கதிஜா நுஸ்ரத் ஃபஹிமா (1119 / 1200)
தகப்பனார் பெயர் : நூஹூ யாஸீன்,
K.T.M. தெரு.
பரிசுத் தொகை : ரூபாய் 2000.
2) M.N. ஃபாத்திமா நாச்சி (1092 / 1200)
தகப்பனார் பெயர் : முஹம்மது மெய்தீன்,
அலியார் தெரு.
பரிசுத் தொகை : ரூபாய் 1000.
3) U.Z.K. மரியம் (1054 / 1200)
தகப்பனார் பெயர் : உவைஸூல் கர்னி,
மரைக்கார் பள்ளி தெரு,
பரிசுத் தொகை : ரூபாய் 500.
10-ம் வகுப்பு:
1) M.M. ஹபீப் சுமைய்யா (487 / 500)
தகப்பனார் பெயர் : M.A.முஹம்மது மொஹூதூம்,
அலியார் தெரு,
பரிசுத் தொகை : ரூபாய் 1000.
2) L.H. ஆயிஷா சித்தீக்கா (480 / 500)
தகப்பனார் பெயர் : லுக்மானுல் ஹக்கீம்,
அலியார் தெரு,
பரிசுத் தொகை : ரூபாய் 600.
3) P.M. ஹலீமா ருஜா (480 / 500)
தகப்பனார் பெயர் : மர்ஹூம் பஷீர் முஹம்மது,
மரைக்கார் பள்ளி தெரு,
பரிசுத் தொகை : ரூபாய் 500.
கல்வித் தகுதி போட்டியில் கலந்து கொண்ட இதர மாணவ, மாணவியர்கள் 6 பேர்களுக்கு ஆறுதல் பரிசாக பேனா செட் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆசிரியர் M.ரஸாக் அவர்கள் உரையாற்றினார்கள். இறுதியாக ஜனாப்.M.A.செய்யது இப்றாஹீம் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மஹல்லா ஜமாஅத்தினர் மற்றும் கல்வியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நலச்சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
D.ஷெய்கு அப்பாஸ் ஃபைஸல் |