செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக், தமிழ்நாட்டில் 15 எம்.எல்.ஏ.க்கள்; 2 எம்.பி.க்களை பெற வேண்டும்! காயல்பட்டினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[26 August 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 29725
தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளில் 15 எம்.எல்.ஏ. தொகுதிகளிலும், 2 எம்.பி. தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாமானதே. எனினும்
1967ஆம் ஆண்டு பொது தேர்தலில் அப்போதைய காயிதேமில்லத் அவர்கள் தலைமையில் இயங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்க்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் 15 எம்.எல்.ஏ. தொகுதியை வழங்கினார்கள். இதில் கணிசமாக வெற்றியும் பெற்றனர். இப்போதைய சூழலில் எந்த முஸ்லிம் கட்சிக்கும் அதன் திராவிட கூட்டணி கட்சிகள் 15 தொகுதிகள் ஒதுக்க முன்வருவதில்லை. அதற்க்கு திராவிட கட்சிகள் கூறும் காரணம், முன்பு முஸ்லிம்கள் ஒரே இயக்கமாக இருந்தனர் .இப்போதோ முஸ்லிம்கள் பல இயக்கங்களாக பிரிந்து நிற்கின்றனர். இதனால் அவர்களின் ஓட்டு பிரிகிறது, வெற்றி வாய்ப்பு குறைகிறது என காரணம் கூறுகின்றனர்.
எனவே இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டால் , நீங்கள் நினைக்கும் இந்த 15 எம்.எல்.ஏ. தொகுதிகளிலும், 2 எம்.பி. தொகுதி என்கின்ற லட்சியத்தை அடைய முடியும். இந்த (15 எம்.எல்.ஏ. மற்றும் 2 எம்.பி) தொகுதிகளை இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளவேண்டியதுதான். எனவே இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் .இதன் மூலமே முஸ்லிம்கள் அதிக அளவில் பயனடைய முடியும்.
நம் சமுதாய முன்னேற்றத்திற்க்காக , நம் அரசியல் கட்சிகள் , இவ்விதம் சிந்திப்பார்களா? ஒன்று சேர்வார்களா? உடன்படுவார்களா? சிந்திப்பீர்! செயல்படுவீர்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross