செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக், தமிழ்நாட்டில் 15 எம்.எல்.ஏ.க்கள்; 2 எம்.பி.க்களை பெற வேண்டும்! காயல்பட்டினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நிறைவேறாத ஆசைகள்.. posted byMackie Noohuthambi (kayalpatnam)[26 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29727
பெருநாள் மட்டுமா மூன்று தினங்களாக கொனடாடுகிறோம். நோன்பு தலை பிறை மூன்று, 1000 வருடங்களை விட சிறந்த நாள் என்று சொல்லப்படும் லைலதுல் கதர் இரவும் மூன்று, அரபா நோன்பு, ஹஜ்ஜு பெருநாள் எல்லாமே நமக்கு வேறு வேறு நாள்தான். நேற்றுதான் ஒரு இறை ஒரு மறை ஒரு பிறை என்று ஒரு கருத்தரங்கமே நடத்தி முடிவு காணாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது. அதை விடுங்கள் அது பழகி போய் விட்டது.
அரசியலுக்கு வாருங்கள். நீங்கள் தலைமை தாங்கும் முஸ்லிம் லீக்காவது முஸ்லிம்களுக்கு கைகொடுக்குமா?
இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, நோன்பு வைத்த ஏழைகளுக்கு நோன்பு திறக்க உதவினால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்க நீங்கள் மூன்று வேளை உணவருந்தி கொண்டு சாப்பிட்டது செமிக்க கொக்க கோலா குடித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம் அழைத்து நோன்பு திறக்க உணவளிக்கிறீர்கள். அவர்கள் அவற்றை நிரப்பமாக சாப்பிட்டு விட்டு உங்களை புகழக் கூட வேண்டாம். உங்களை எள்ளி நகையாடாமல் இருந்திருக்க வேண்டாமா? கூட்டணி நாயகன் சொல்கிறார்,
"பேராசிரியார் அவர்கள் நான் அதிகம் பேச வேண்டும் என்பதற்காக அவர் பேசுவதை குறைத்துக் கொண்டார், இதேபோல் வருகின்ற தேர்தலிலும் அதிகம் சீட் கேட்பதை குறைத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்".
இதை கேட்டுக் கொண்டு எல்லோரும் மௌனிகளாக இருக்கிறார்கள். மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா அல்லது கூட்டணி தர்மமே கலைஞர் பேசுவதை அப்படியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற எழுதாத சட்டமா?
இவரிடம் நீங்கள் எப்படி சட்டமன்றத்துக்கு 15 சீட்டும் நாடாளுமன்றத்துக்கு 2 சீட்டும் கேட்கப்போகிறீர்கள்? ஒன்றும் புரியவில்லை.
பேரறிஞர் அண்ணா அவர்கள் பெருந்தன்மை வேறு, தமிழறிஞர் கருணாநிதி அவர்கள் பெருந்தன்மை வேறு. என்ன நடக்கபோகிறதோ அல்லாஹ் மிக அறிந்தவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross